Arun Janardhanan
சூப்பர் ஸ்டார் விஜய்யின் சாத்தியமான அரசியல் அறிமுகம் குறித்து தமிழ்நாட்டு கட்சிகள் அனைத்தும் பேசி வருகின்றன, சமீபத்தில் விஜய் தான் நீண்டகாலமாக எடுத்துவரும் இந்த கடினமான முயற்சியில் களமிறங்க உள்ளதாக சுட்டிக்காட்டினார்.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் இருவரும் அரசியலுக்கு வருவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என தெரிவித்துள்ளனர். ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என பெற்றோர்களிடம் கூறுங்கள் என்று மாணவர்களிடம் விஜய் கூறியது குறித்து குறிப்பாகக் கேட்டதற்கு, உதயநிதி, “நிச்சயமாக ஆம், இது நல்ல செய்தி இல்லையா?” என்று கூறினார்.
இதையும் படியுங்கள்: சங்பரிவார் காலடி வைத்ததில் இருந்து மணிப்பூர் பற்றி எரிகிறது – திருமாவளவன்
அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணி குறித்து சமீபத்தில் தனது கருத்துக்களால் சர்ச்சையை கிளப்பிய பா.ஜ.க மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, ஓட்டுக்காகப் பணம் வாங்க வேண்டாம் என்று பெற்றோரிடம் சொல்ல இளைஞர்களுக்கு விஜய் அறிவுரை கூறியதை வரவேற்பதாகக் கூறினார். "நாங்களும் அதையே வலியுறுத்துகிறோம். விஜய் சொல்லும்போது அது வேகமெடுக்கிறது” என்று அண்ணாமலை கூறினார்.
விஜய்யின் அரசியல் பிரவேசம் தமிழக அரசியலில் மாற்றுக் குரல்களை வலுப்படுத்தும் என்று தமிழ்த் தேசியத் தலைவரும், தமிழ் திரைப்பட இயக்குனரும், நாம் தமிழர் கட்சித் தலைவருமான சீமான் கூறினார். அதேநேரத்தில் விஜய்யின் அரசியல் நுழைவு தனது கட்சியை பாதிக்காது என்றும் சீமான் கூறினார். அவரது நாம் தமிழர் கட்சி, "2021 சட்டமன்றத் தேர்தலில் 6% வாக்குகளைப் பெற்றிருந்தது".
அ.தி.மு.க கிளர்ச்சி தலைவரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (AMMK) தலைவருமான டி.டி.வி தினகரன், விஜய்யைப் போன்ற செல்வாக்கு மிக்க ஒருவர் ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என்று எடுத்துரைப்பது "நல்லது" என்று கூறினார். வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதாக விஜய் கூறியது உண்மைதான் என்று டி.டி.வி தினகரன் கூறினார்.
தற்செயலாக, தினகரன் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார், அதற்காக தேர்தல் ஆணையரின் கண்காணிப்பின் கீழ் கூட வந்தார்.
சினிமா மற்றும் அரசியலை பிரிக்க முடியாது என்று நன்கு அறிந்த ஒரு மாநிலத்தில், விஜய்யின் நுழைவு நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டது, குறிப்பாக அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற தனது ரசிகர் அமைப்பின் மூலம் அவர் கட்டியெழுப்பிய அடித்தளத்தின் வெளிச்சத்தில் விஜய்யின் அரசியல் நுழைவு நீண்டகாலமாக எதிர்ப்பார்க்கப்பட்டு வருகிறது.
விஜய் வயது வித்தியாசம் இல்லாமல் குறிப்பிடத்தக்க அளவு ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார். விஜய்க்கு 48 வயது ஆனாலும், அவரது இளமையான தோற்றம் இளைஞர்களிடம் மிகப்பெரிய ஈர்ப்பாக இருப்பதாக அவரது ரசிகர்களும் கருதுகின்றனர், இது பாரம்பரிய, மரபு அரசியலில் இருந்து மாற்றத்தைக் குறிக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil