கிறிஸ்துவர்களின் சாம்பல் புதன் நாளையொட்டி புதுச்சேரியில் 40 நாள்கள் தவக்காலம் தொடங்கியதையொட்டி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது.
Advertisment
இயேசு சிலுவையில் அரையப்படுவதற்கு முன்பு 40 நாள்கள் தவம் இருந்தார். அவ்வாறு இயேசு தவக்காலம் தொடங்கியது சாம்பல் புதன் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான சாம்பல் புதன் இன்று தொடங்கியது. தவக்காலம் இன்று தொடங்கி, 40 நாள்களுக்கு கிறிஸ்துவர்கள் நோன்பு இருப்பார்கள்.
இதனையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெற்ற திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். ரயில் நிலையம் எதிரில் உள்ள பிரெஞ்சு காலத்து இருதய ஆண்டவர் தேவாலயத்தில் பங்கு தந்தை குழந்தைசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு சாம்பல் பூசும் நிகழ்வுகள் நடைபெற்றது.
Advertisment
Advertisements
இதேபோல் புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள மிகவும் பழைமையான தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயம், வில்லியனூர் லூர்து மாதா தேவாலயம், நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை, புனித அந்தோணியார், அரியாங்குப்பம் மாதா கோயில் உள்பட பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் சாம்பல் புதன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“