Advertisment

அ.தி.மு.க-வில் இணைந்த பா.ஜ.க பெண் வி.ஐ.பி மருமகன்: கொங்கு மண்டல சலசலப்பு

பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகர் அதிமுகவில் இணைந்துள்ளார். இவர் கட்சியில் ஓபிசி துணை தலைவராக இருந்தவர் ஆவார். 2024-ல் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.

author-image
WebDesk
New Update
2024 Lok Sabha Elections

பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி ஆற்றல் அசோக் குமார் அதிமுக கட்சியில் இணைந்துள்ளார்.

aiadmk | tn-bjp | கொங்கு மண்டலத்தில் முக்கிய புள்ளியை அதிமுக தட்டி தூக்கியுள்ளது. இவர் மொடக்குறிச்சி பாஜக எம்.எல்.ஏ சரஸ்வதியின் மருமகன் ஆவார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியில் ஓபிசி அணியின் துணைத் தலைவராக இருந்தவர் அசோக் குமார். இவர், மொடக்குறிச்சி பாஜக எம்.எல்.ஏ சரஸ்வதியின் மருமகன் ஆவார்.
இவர் சமீபகாலமாக கட்சியில் அதிருப்தியில் இருந்துவந்தார். இந்த நிலையில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்துக்கொண்டார்.

Advertisment

பாஜக எம்.எல்.ஏ சரஸ்வதியின் மகளாக கருணாம்பிகை என்பவரை அசோக் குமார் திருமணம் செய்துள்ளார். மேலும் அசோக் ஆற்றல் என்ன அறக்கட்டளை நடத்திவருகிறார்.
அமெரிக்காவில் வேலை செய்த இவர், அரசியலிலும் நீண்ட அனுபவம் கொண்டவர் ஆவார். 2024 மக்களவை தேர்தலை கவனத்தில் கொண்டு கட்சிகள் பணியாற்றிவருகின்றன.

இந்தத் தேர்தலை அதிமுக தனித்து சந்திக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. இதற்கிடையில் திமுகவிடம் 15 தொகுதிகள் வரை கேட்க வேண்டும் என கட்சி நிர்வாகிகள் வலியுறுத்திவருகின்றனர்.
இது தொடர்பாக திமுகவிடம் இருந்து எந்தப் பதிலும் இதுவரை வரவில்லை. இதற்கிடையில் கடந்த முறை 1 தொகுதியில் போட்டியிட்ட கட்சிகள் கூட 2 தொகுதிகள் வரை கேட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Aiadmk Tn Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment