Advertisment

லேட்டஸ்ட் டெக்னாலஜி வசதிகளுடன் 1666 புதிய பஸ்கள்: அசோக் லேலண்ட் நிறுவனத்தில் வாங்கும் தமிழக அரசு

இது மாநிலப் போக்குவரத்து நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட மிகப்பெரிய ஆர்டர் என்றும், பேருந்துத் துறையில் அதன் மேலாதிக்க நிலையை மேலும் வலுப்படுத்த பங்களிக்கும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

author-image
WebDesk
New Update
bus debo

அசோக் லேலண்ட், 1,666 பேருந்துகளுக்கான ஆர்டரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளது.

1666 buses to Tamil Nadu State Transport: நாட்டின் முன்னணி வர்த்தக வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்ட், 1,666 பேருந்துகளுக்கான ஆர்டரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளது.

Advertisment

இது மாநிலப் போக்குவரத்து நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட மிகப்பெரிய ஆர்டர் என்றும், பேருந்துத் துறையில் அதன் மேலாதிக்க நிலையை மேலும் வலுப்படுத்த பங்களிக்கும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

இந்த பேருந்துகள் பயணிகளின் வசதியை உறுதி செய்வதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன, மேலும் iGen6 BS VI தொழில்நுட்பத்துடன் 147 kW (197 hp) H-சீரிஸ் எஞ்சினைக் கொண்டிருக்கும்.

இந்த எஞ்சின் பாதுகாப்பு, வசதியை மேம்படுத்தும் மற்றும் ஒட்டுமொத்த உரிமைச் செலவைக் (TCO) குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து, அசோக் லேலண்டின் எம்.டி & சி.இ.ஓ., ஷேனு அகர்வால் கூறுகையில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்து நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட மிகப்பெரிய BSVI ஆர்டரைப் பெற்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

எங்களின் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் புதுமையான தீர்வுகளுடன் இணைந்து மதிப்பை வழங்குவதற்கான எங்களின் திறன், இந்திய பேருந்து சந்தையில், குறிப்பாக STUக்களுடன் எங்களது உயர்மட்ட நிலையை நிலைநிறுத்த உதவுகிறது.

மேலும், புதிய எல்லைகளை ஆராய்வதற்கும் உதவுகிறது. நமது நாட்டின் பொது நடமாட்டத் தேவைகளை விரைவாக விரிவுபடுத்துகிறது” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment