Advertisment

தமிழக ரயில்வே துறைக்கு ரூ.6080 கோடி ஒதுக்கீடு: அஸ்வினி வைஸ்ணவ்

தமிழ்நாடு ரயில்வே துறைக்கு மத்திய அரசு ரூ.6080 கோடி வழங்கியுள்ளது; தமிழகத்தில் 75 ரயில் நிலையங்கள் உலகத் தரத்திற்கு மேம்படுத்தப்பட்டு வருகின்றன என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Railway Minister Ashwini Vaishnaw on Chennai - Cuddalore rail line via Puducherry Tamil News

2014க்கு முன், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருந்தபோது, தமிழகத்துக்கான ஒதுக்கீடு, 879 கோடியாக மட்டுமே இருந்தது.

indian-railways | 2014க்கு முன், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருந்தபோது, தமிழகத்துக்கான ஒதுக்கீடு, 879 கோடியாக மட்டுமே இருந்தது என அஸ்வினி வைஸ்ணவ் கூறினார்.
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ், ஓசூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ரயில்வே துறையில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக கடந்த ஓராண்டில் 6,080 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது.
2014க்கு முன், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருந்தபோது, தமிழகத்துக்கான ஒதுக்கீடு, 879 கோடியாக மட்டுமே இருந்தது.
தமிழகத்தில் ரயில்வே துறைக்கு பிரதமர் மோடி இன்று 6,080 கோடி ரூபாய் வழங்குகிறார். கடந்த காலங்களில் நிலுவையில் இருந்த திட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் 75 ரயில் நிலையங்கள் உலகத் தரத்திற்கு மேம்படுத்தப்பட்டு வருகின்றன" என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அஸ்வினி வைஸ்ணவ் ரயிலில் பெங்களூரு சென்றார். அவருக்கு பாஜக மாவட்ட தலைவர் நாகராஜ், எம்.பி. நரசிம்மா மற்றும் ஏராளமான பாஜக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Indian Railways
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment