ஆசியாவின் மிகப்பெரிய பெண் யானை கல்பனா மரணம்! வனத்துறையினர் அஞ்சலி…

யானையின் நினைவாக கல்பனாவின் பெயரை கையில் பச்சை குத்தியுள்ளார் அதன் பாகன்.

By: Updated: September 22, 2020, 10:35:53 AM

Asia’s tallest female elephant Kalpana passed away in Coimbatore : கோவை கோழிகமுதி பகுதியில் அமைந்துள்ளது கும்கி யானைகள் பயிற்சி மையம். இங்கு 25க்கும்  மேற்பட்ட கும்கி யானைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இங்கு அனைவருக்கும் மிகவும் பரிட்சையப்பட்ட யானைகளில் ஒன்று தான் கல்பனா யானை. விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா மரணத்தின் தாக்கத்தால், தன்னுடைய வளர்ப்பு யானைக்கு கல்பனா என்று பெயரிட்டார் பழனிசாமி என்ற பாகன்.

Asia's tallest female elephant Kalpana passed away in Coimbatore

41 வயதான கல்பனா நேற்று உடல்நல குறைவு காரணமாக கோவையில் உயிரிழந்தது. அந்த யானைக்கு இறுதி அஞ்சலி நிகழ்வுகளை பாகன்களும், வனத்துறையினரும் நடத்தினர். ஆசியாவிலேயே மிகவும் உயரமான பெண் யானையாக கருதப்படுகிறது கல்பனா. கல்பனா பற்றி பேசும்  போது, பழனிசாமி என்றும் மகிழ்ச்சியுடன் கூடிய மனிதராகவே இருப்பார். ”என்னுடைய குடும்பத்தில் ஒருத்தி அவள்” என்று அவர் கல்பனாவை பற்றி அறிமுகம் செய்து வைத்தார்.

மேலும் படிக்க : யானைகள் ஏன் கும்கிகள் ஆக்கப்படுகிறது? தமிழக பாகன்களின் கதை தெரியுமா உங்களுக்கு?

காலையிலும் மாலையிலும் கல்பனாவை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது முதல், குளிக்க வைத்து அந்த யானையின் கால்களுக்கு மருந்து தேய்ப்பது போன்ற அனைத்து வேலைகளையும் மிகவும் சிரத்தையுடன் செய்து வந்தார் பழனிசாமி. யானையின் நினைவாக கல்பனாவின் பெயரை கையில் பச்சை குத்தியுள்ளார் பழனி என்பது குறிப்பிடத்தக்கது.   டாப்ஸ்லிப் மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் சேத்துமடை காடுகளில் இந்த யானை பிடிக்கப்பட்டதாக பலரும் கூறுகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Asias tallest female elephant kalpana passed away in coimbatore

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X