தென் மண்டல அளவிலான 18 வயதுக்குட்பட்ட அஸ்மிதா மகளிர் யோகாசன போட்டியில், 3 தங்கம், 8 வெள்ளி என 11 பதக்கங்களைப் பெற்ற மாணவிகளை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.
தமிழ்நாடு இளைஞர் விளையாட்டு யோகாசன சங்கம், இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் யோகாசன பாரத் சார்பாக திருச்சியில் தென் மண்டல அளவிலான அஸ்மிதா கேலோ இந்தியா மகளிர் யோகா போட்டி நடைபெற்றது..
புதுவை, தமிழ்நாடு,கேரளா,ஆந்திரா ,தெலுங்கானா, கர்நாடாகா, ஆகிய 6 மாநிலங்களில் இருந்தும் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட யோகா வீராங்கனைகள் கலந்து கொண்டனர்..
இதில் தமிழ்நாடு அணி சார்பாக கோவை யோவா யோகா அகாடமியின் தலைமை பயிற்சியாளர் வைஷ்ணவி மற்றும் அவரது மாணவிகள் தாக்ஷயா ஸ்ரீ, சக்தி சஞ்சனா,ராகவர்தினி, பவ்ய ஸ்ரீ ,ஷிவானி ஆகிய ஆறு பேர் கலந்து கொண்டனர்.
18 வயதிற்கு உட்பட்ட மற்றும் அதற்கு மேல் என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில், கலை ஜோடி,பாரம்பரிய யோகா,கலை ஒற்றையர்,கலை குழு,என பல்வேறு பிரிவுகளில் மூன்று தங்கம் எட்டு வெண்கலம் என பதினோரு பதக்கங்கள் வென்று அசத்தினர்.
போட்டியில் பதக்கம் வென்ற அனைவரும் தேசிய அளவிலான அஸ்மிதா கேலோ இந்திய பெண்கள் லீக் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் கோவை திரும்பிய வீராங்கனைகள் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தென் மண்டல அளவில் வெற்றி பெற்று தேர்வாகி உள்ள ஆறு பேரும் அடுத்து தேசிய அளவில் நடைபெற உள்ள மகளிர்க்கான போட்டியில் கலந்து கொள்ள செல்ல உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தொடர்ந்து வீராங்கனைகள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஆனந்த் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கோவை பிரிவு சீனியர் மேனேஜர் அருணா ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்த சந்திப்பின் போது யோவா யோகா அகாடமியின் இயக்குனர் சரவணன் மாணவிகளின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“