தமிழக சட்டசபையின் நடப்பாண்டின் கடைசி கூட்டத் தொடரின் முதல் நாள் கூட்டம் இன்று டிச.9 நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெற்றது.
இதில் மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மேலும் இது குறித்த விவாதங்களும் சட்டசபையில் நடைபெற்றது. அப்போது பேசிய இ.பி.எஸ், “ நான் அவையுடைய கவனத்திற்கு கொண்டு வருவது என்வென்றால், இதுகுறித்து முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து இருந்தால் இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது” என்று ஆவேசமாக பேசினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், “ஏற்கனவே இந்த திட்டத்தை எல்லாம் முயற்சி எடுத்து மத்திய அரசுக்கு தெரிவித்து அவர்கள் ஒத்து வராததால் தான் இந்த தீர்மானத்தை கொண்டு வருகிறோம்” என்று அதேபோல ஆவேசமாக பதிலளித்தார்.
அதற்கு எடப்பாடி பழனிசாமி,” ஒன்றும் செய்ய முடியவில்லை என்றால் இப்படி தான் பேச முடியும் ‘ஆ ஊ-ன்னா என்ன? மக்கள் பிரச்சனைக்கு உயிரைக் கூட கொடுப்போம்” என்று தி.மு.கவினர் பேசுவார்கள் என்று கூறினார்.
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரியபோதே தனித்தீர்மானம் கொண்டுவந்து மத்திய அரசுக்கு அனுப்பி இருந்தால் எளிதாக முடித்து இருக்கலாம். ஆனால் தமிழக அரசு எதையும் செய்யவில்லை, அதை எடுத்துச் சொன்னால் எல்லோருக்கும் கோபம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
டங்ஸ்டன் ஒப்பந்தத்தை அறிவித்தது முதல் இறுதி செய்தது வரை தமிழக அரசு அமைதி காத்தது. தங்கள் தவறு தெரியவந்ததும் பிரச்சினையை பூசிமொழுகி, மறைக்கப் பார்க்கிறது இந்த தமிழக அரசு. மேலும் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்திருந்தால் இந்த பிரச்னையே வந்திருக்காது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“