சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட்… சசிகலா குடும்பத்தின் ரூ 2,000 கோடி சொத்து முடக்கம்

பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான சுமார் ரூ.2,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வருமானவரித்துறை முடக்கியுள்ளது.

Assets worth Rs 2,000 crore frozen, Sasikala property frozen, elavarasi property frozen, Sudhakaran property frozen, சசிகலா சொத்துக்கள் முடக்கம், under benami prohibition act sasikal property frozen, சசிகலாவின் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம், இளவரசி, சுதாகரன், income tax department, income tax

பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான சுமார் ரூ.2,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வருமானவரித்துறை முடக்கியுள்ளது.

2017ம் ஆண்டு சசிகலாவுக்குச் சொந்தமான சிறுதாவூர் பங்களா உள்ளிட்ட தமிழகம் முழுவதிலும் உள்ள 187 இடங்களில் வருமான வரித்துறை சோதனை ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை நடத்தியது. இந்த தனையில், கணக்கில் வராத ரூ.5 கோடி பணம் ஏராளமான ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

வருமானவரித்துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் 1,600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியது.

இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் வருமான வரித்துறை இதில் சம்பந்தப்பட்ட பல்வேறு பினாமிகளை அடையாளம் கண்டு அவர்களிடம் இருந்து 2வது முறையாக சுமார் ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது.

இந்த நிலையில், சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ரூ. 2,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை முடக்கியுள்ளது. சிறுதாவூர் பங்களாவில் வருமானவரித்துறை நோட்டீஸ் ஒட்டியுள்ளது.
வருமானவரித்துறை சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட சொத்துக்களை முடக்கியுளது. வருமான வரித்துறையால் முடக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ. 2,000 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Web Title: Assets worth rs 2000 crore belonging to sasikala elavarasi and sudhakaran are frozen under benami prohibition act

Next Story
ஹத்ராஸ் தலித் பெண்ணை கொன்றது கம்யூனிஸ்டுகளாம்… அவதூறு போஸ்டர் ஒட்டிய பாஜக மீது புகார்TN congress committees complaint on derogatory poster, hathras derogatory poster behalf bjp, bjp, ஹத்ராஸ், காங்கிரஸ் கட்சி புகார், பாஜக சார்பில் அவதூறு போஸ்டர், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், kanyakumari bjp, hathras gangrape case, poster against congress communists behalf bjp, tamil andu, congress party
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com