திருமாவளவன் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு: உதவிப் பேராசிரியர் கைது

30 வயது நிரம்பிய அவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருவதாகவும் காவல்துறை தெரிவித்தது.

By: Updated: May 24, 2020, 01:26:51 PM

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறு செய்தியை வெளியிட்ட உதவிப் பேராசிரியரை நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை கைது செய்தது.

30 வயது நிரம்பிய அவர் ,நாகப்பட்டினம் பொறையார் அருகே அமைந்திருக்கும் தில்லையடி கிராமத்தில் வசித்து வருவதாகவும்,  தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருவதாகவும் காவல்துறை தெரிவித்தது.


நாகப்பட்டின மாவட்ட அளவிலான வி.சி.க தலைவர் ஸ்டாலின் அளித்த புகாரின் பேரில் காவல்துறை இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளது. அந்த நபர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Assistant professor arrested for derogatory message on social media against thol thirumavalavan193483

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X