ஜோதிடர் கோபாகிருஷ்ணன் வலையொளி சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இந்த ஆண்டு பின்னடைவாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், “மு.க. ஸ்டாலினுக்கு கடந்த ஆண்டு அடிமேல் அடிமேல் விழுந்தது. செந்தில் பாலாஜி விவகாரம், பஸ் ஸ்டிரைக், பொன்முடிக்கு தண்டனை, கலைஞர் நுற்றாண்டு விழாவில் பிரச்னை எனத் தொடர்ந்தது.
Advertisment
அவர் இந்தியா கூட்டணியில் பிரச்னை இல்லாமல் சென்று விடலாம் என நினைக்கிறார். ஆனால் அதற்கு வாய்ப்பு குறைவு. அடுத்தடுத்து பிரச்னைகள் ஏற்படும். பின்னடைவுகளும் ஏற்படும். உதயநிதி ஸ்டாலின் பேச்சுகளும் பலரின் கண்டனங்களுக்கு ஆகிவருகிறது. அவரது உடல் நலம் குறித்து வதந்தி நிலவுகிறது. இந்த ஆண்டு மு.க. ஸ்டாலினுக்கு பிரச்னைக்குரிய ஆண்டாக இருக்கும். இதில் இருந்து விடுபட அவர் (மு.க. ஸ்டாலின்) சத்ரு சம்ஹார ஹோமம் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“