விஜய் அரசியலுக்கு வருவார்... ஆனால்..? ரசிகர்களை பதற வைத்த ஜோதிடர்

நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் எப்போது? கணித்து கூறிய ஜோதிடர்; ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் எப்போது? கணித்து கூறிய ஜோதிடர்; ரசிகர்கள் அதிர்ச்சி

author-image
WebDesk
New Update
விஜய் அரசியலுக்கு வருவார்... ஆனால்..? ரசிகர்களை பதற வைத்த ஜோதிடர்

Astrologist predicts Actor Vijay politics entry: நடிகர் விஜய் அரசியலுக்கு எப்போது வருவார் என ஜோதிடர் ஒருவர் கணித்து கூறியுள்ளார். இந்த தகவல் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் விஜய். தமிழ்நாட்டில் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் அவரது விஜய் மக்கள் இயக்கத்திலும் ஏராளமான உறுப்பினர்கள் உள்ளனர்.

நடிகர் விஜய்க்கு அரசியலில் நுழைய வேண்டும் என்ற ஆசை சிலகாலமாகவே இருந்து வருகிறது. இருப்பினும் நடிகர் விஜய் இதுவரை நேரடி அரசியலில் களமிறங்கவில்லை. சரியான நேரத்தில் அரசியலுக்கு வர காத்திருக்கிறார் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர்.

இதனிடையே, விஜய்யின் பிறந்தநாளுக்கு போஸ்டர் அடிக்கும்போது எல்லாம் வருங்கால முதல்வரே என்கிற வாசகத்தை மறக்காமல் வைத்துவிடுகிறார்கள் ரசிகர்கள். மேலும், விஜய்யை முதல்வராக்கிப் பார்க்க அவரின் ரசிகர்கள் ஆசைப்படுவதில் தவறு எதுவும் இல்லை என்று விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.

Advertisment
Advertisements

சில மாதங்களுக்கு முன்னர் நடந்த முடிந்த 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சிலர் வெற்றி பெற்றுள்ளனர். இது விஜய்யின் அரசியல் வருகைக்கு ஆரம்பமாக பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நடிகர் விஜய் 7 ஆண்டுகள் கழித்து அரசியலுக்கு வருவார். அவர் அரசியலுக்கு வரும்போது அவரின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் திரையுலகில் ஹீரோவாக இருப்பார் என ஜோதிடர் ஒருவர் கணித்து கூறியிருக்கிறார்.

ஆனால், ஜேசன் சஞ்சய்க்கு தன் அப்பா விஜய் போன்று நடிகராக விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. ஜேசன் சஞ்சய் படம் இயக்க விரும்புவதாகவும், அனுபவம் கிடைத்த பிறகு தன் அப்பாவை ஹீரோவாக வைத்து படம் இயக்கும் ஐடியாவில் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும், விஜய் தனது மகன் மற்றும் மகளின் எதிர்காலத்தை அவர்களின் கைகளில் விட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த ஜோதிடர் கூறியது போன்று ஜேசன் ஹீரோ ஆவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் முக்கியமாக கவனிக்க வேண்டியது, விஜய் அரசியலுக்கு வருவார், ஆனால் 7 வருடங்கள் கழித்து என்பது விஜய்யின் அரசியல் வருகையை எதிர்நோக்கும் தளபதி ரசிகர்களை கவலை கொள்ள வைத்திருக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actor Vijay Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: