Advertisment

வீண் தகராறு செய்து 2 பேர் மீது தாக்குதல்: சென்னையில் 6 இளைஞர்கள் கைது

சென்னை மதுரவாயலில் வீண் தகராறு செய்து 2 பேர் மீது தாக்குதல் நடத்திய 6 இளைஞர்களை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Attack on 2 people over futile argument 6 youths arrested in Chennai Tamil News

வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியதால், பிரசாந்த் மற்றும் அவரது நண்பரை 6 இளைஞர்களும் கடுமையாக தாக்கியதுடன், கொலை மிரட்டலும் விடுத்துச் சென்றனர்.

சென்னை தண்டலம் திருவிக நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் (30). இவர் கடந்த 15 ஆம் தேதி இரவு தனது நண்பர் ஒருவருடன் மதுரவாயல் அடுத்து நூம்பல் பகுதியில் உள்ள மைதானம் ஒன்றில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 6 இளைஞர்கள் பிரசாந்திடம் வீண் தகாராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

Advertisment

இந்த வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியதால், பிரசாந்த் மற்றும் அவரது நண்பரை 6 இளைஞர்களும் கடுமையாக தாக்கியதுடன், கொலை மிரட்டலும் விடுத்துச் சென்றனர். இந்த தாக்குதலில் காயமடைந்த பிரசாந்த் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். 

சிகிச்சையில் இருந்து மீண்ட பின்னர் மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீஸார், வீண் தகராறு செய்து தாக்குதல் நடத்திய 6 இளைஞர்களையும் கைது செய்தனர். 

விசாரணையில் அவர்கள் தண்டலம் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (26), சந்தோஷ் (24) (எ) பில்லா, விக்னேஷ் (21), அபினேஷ் (25), நூம்பல் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீநாத் (24) மறும் திண்டிவனத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் (25) என்பது தெரியவந்தது.

இதில் பிரசாந்த் மற்றும் சந்தோஷ் குமார் மீது தலா 2 குற்ற வழக்குகளும், சந்தோஷ் மற்றும் விக்னேஷ் மீது தலா ஒரு குற்ற வழக்கும் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் பின்னர் சிறையில் அடைத்தனர்.

செய்தி: சக்தி சரவணன் -  சென்னை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment