Advertisment

செம்மண் கடத்தலை தடுத்த துறையூர் வட்ட வருவாய் ஆய்வாளர் மீது தாக்குதல்: ஆட்சியர் கடும் எச்சரிக்கை

தாக்குதலுக்குள்ளான வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை பெருமாள் பாளையம் ஆரம்ப சுகாதாரநிலையத்தில் சிகிச்சைப் பெற்றார்.

author-image
WebDesk
New Update
Attack on Circle Revenue Inspector who stopped sand smuggling in Trichy

திருச்சியில் மணல் கடத்தலை தடுத்த வட்ட வருவாய் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் தி.மு.க.வை சேர்ந்த மகேஸ்வரன்.

இவரும் அதே கிராமத்தை சேர்ந்த தனபால், மணி ஆகிய மூவரும் சேர்ந்து நரசிங்கபுரம் கிராமத்தை ஒட்டியுள்ள பச்சைமலை பகுதியில் இருந்து, இரவு நேரங்களில் ஜே.சி.பி. உதவியுடன் செம்மண் கடத்தியுள்ளனர்.

Advertisment

இந்த சட்டவிரோத மணல் கடத்தல் தொடர்பான தகவலின் பேரில் துறையூர் வட்ட வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மணல் கடத்தலை தடுக்க அப்பகுதிக்குச் சென்று பணியில் ஈடுபட்டபோது நரசிங்கபுர ஊராட்சி மன்றத்தலைவரான மகேஸ்வரன், தனபால், மணி மற்றும் கந்தசாமி ஆகியோர் கொடூர தாக்குதலை மேற்கொண்டு அவ்விடத்தை விட்டு தலைமறைவாகினர்.

உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் சுவாமிநாதன் தகவலை பெற்று தாக்குதலுக்குள்ளான வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை பெருமாள் பாளையம் ஆரம்ப சுகாதாரநிலையம் அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை கிடைக்கச் செய்தார்.

அதன் பின்னர் துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரை இன்று நேரில் சந்தித்து மாவட்ட ஆட்சியர் ஆறுதல் கூறினார்.

மேலும், அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுக்கும் செயலை செய்பவர் எவராக இருந்தாலும் மாவட்ட நிர்வாகம் அதனை அனுமதிக்காது. இக்குற்றச் செயலில் ஈடுபட்டோர் மீது உடனடியாக காவல்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் மீது இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 294b),341,323,353,332,307,506(1),379 மற்றும் 21(4)ன் கீழ் வழக்கு பதியப்பட்டு மகேஸ், தனபால், மணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கந்தசாமி என்பவர் விரைவில் கைது செய்யப்படுவார். இவர்கள் மீது தொடர்ச்சியான சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்தார்.

மேலும், சட்டவிரோத நடவடிக்கைகளில் யார் ஈடுபட்டாலும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர் க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment