/tamil-ie/media/media_files/uploads/2023/08/Manusyaputhiran.jpg)
கவிஞர் மனுஷ்யபுத்திரன், நாங்குநேரியில் தாக்கப்பட்ட பட்டியலின மாணவர்.
திமுக ஆதரவாளரும், கவிஞருமதன மனுஷ்யபுத்திரன் பேஸ்புக் சமூக வலைதளத்தில், “நாங்குநேரி சம்பவம் மனம் உடையச் செய்கிறது. நம் குழந்தைகளிடம் நம்பிக்கை இழந்துபோகவேண்டாம். நான் கடந்த ஓராண்டில் பல்லாயிரம் மாணவர்களை தமிழ்நாடு முழுக்க சந்தித்திருக்கிறேன்.
மானுடத்தின் உயரிய விழுமியங்களைப் பேசியிருக்கிறேன். இந்த வாரம் மட்டும் 5 கல்லூரிகளில் நான்காயிரம் மாணவர்களிடம் பேசியிருக்கிறேன்.
வெறுப்புக்கு எதிராகவும் அன்பின் நிமித்தமாகவும் அவர்கள் இதயங்கள கனியச் செய்ய போராடிக்கொண்டிருக்கிறேன். நான் சந்தித்த பெரும்பாலான மாணவ மாணவிகள் நல்லியல்பு கொண்டவர்கள்.
அவர்களை சிலசமயம் வெறுப்பின் நஞ்சு ஆட்ககொண்டுவிடுகிறது. அதை நாம் பெருமுயற்சியுடன் போக்கவேண்டும்.
இன்னும் ஆயிரம் ஆயிரம் குரல்களால் நாமிந்தப் பணியைச் செய்யவேண்டும். எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், கலைஞர்கள், அரசியல் தலைவர்களுக்கு இதில் பெரும்பங்கு இருக்கிறது.
வெறுப்பின் நச்சுவிதைகள் காற்றில் தீவிரமாகப் பரவிக்கொண்டிருக்கின்றன. சாதியவாதத்தின் மதவாதத்தின் கொடுங்கரங்கள் நம்பிள்ளைகளை கைப்பற்ற விழைகின்றன. நாம் அவர்களைக் காக்க ஒருங்கிணைந்துபோராடவேண்டும்.
தீமையை அன்பும் அறமும் எப்போதும் வென்றே வந்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பட்டியலின மாணவன், அவரது தங்கை சக மாணவர்களால் வெட்டப்பட்டனர்.
தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதனை தடுக்கச் சென்ற அவர்களது தாத்தா அதிர்ச்சியில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.