கேரளாவில் தஞ்சமடைந்த காயமுற்ற காட்டு யானை: கண்காணிக்க்கும் பணியில் தமிழக வனத்துறை –வீடியோ

தண்ணீரில் நின்றிருந்த யானைக்கு சிகிச்சை அளிப்பது சவாலாக இருந்த நிலையில், வனத்துறையினர் யானையை ஆற்றுக்குள்ளேயே வைத்து சிகிச்சையைத் தொடங்கினர்.

தண்ணீரில் நின்றிருந்த யானைக்கு சிகிச்சை அளிப்பது சவாலாக இருந்த நிலையில், வனத்துறையினர் யானையை ஆற்றுக்குள்ளேயே வைத்து சிகிச்சையைத் தொடங்கினர்.

author-image
WebDesk
New Update
Kerala Elephant water

Attappadi Injured wild elephant rescue

அகளி (கேரளா): கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே பவானி ஆற்றில் காயங்களுடன் தஞ்சம் புகுந்த காட்டு யானையை, தமிழ்நாடு மற்றும் கேரள வனத்துறையினர் கடந்த சில நாட்களாகக் கண்காணித்து வந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டின் வனத்துறையினர் ட்ரோன் மூலம் அதன் அசைவுகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
 
5 நாட்களாக ஆற்றில் நின்ற யானை

Advertisment

கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே உள்ள அகளி பகுதியில், பவானி மற்றும் சிறுவாணி நதிகள் சங்கமிக்கும் கூடப்பட்டி என்ற இடத்திற்கு அருகில் கடந்த ஐந்து நாட்களாக ஒரு காட்டு யானை காயங்களுடன் பவானி ஆற்றில் நின்று கொண்டிருந்தது. இதைப் பார்த்து அச்சமடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

இந்த இடம் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில வன எல்லைப் பகுதி என்பதால், இரு மாநிலங்களின் வனத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானையைத் தீவிரமாகக் கண்காணித்தனர்.

முதற்கட்ட ஆய்வில், யானையின் கால்கள், முதுகு மற்றும் காதின் அருகே ஆழமான காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. வேறொரு யானையுடன் சண்டையிட்டதில் இந்தக் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

Advertisment
Advertisements

சத்தான உணவுடன் சிகிச்சை

தண்ணீரில் நின்றிருந்த யானைக்கு சிகிச்சை அளிப்பது சவாலாக இருந்த நிலையில், வனத்துறையினர் யானையை ஆற்றுக்குள்ளேயே வைத்து சிகிச்சையைத் தொடங்கினர். சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கரும்பு, வாழைப்பழம் மற்றும் வாழைத் தண்டு போன்ற சத்தான உணவுகளுடன் சேர்த்து, ஆன்டிபயாட்டிக் மருந்துகளையும் (Antibiotics) வழங்கினர். காயங்கள் விரைவாக ஆறுவதற்கும், அதன் வலியைத் தணிப்பதற்கும் மருந்துகள் உணவின் மூலம் கொடுக்கப்பட்டன.

தமிழ்நாடு நோக்கி நகர்ந்த யானை

தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சைக்குப் பிறகு, யானை மெல்ல மெல்ல ஆற்றின் கரையிலிருந்து வெளியேறி, தமிழ்நாடு வனப்பகுதியை நோக்கி நகர்ந்தது.

தற்போது, தமிழ்நாட்டின் விரைவு மீட்புக் குழு (RRT - Rapid Response Team), யானையின் உடல்நிலை மற்றும் அதன் அசைவுகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் நகர்வதால், அதன் நடமாட்டத்தை எளிதாகக் கண்காணிக்க ட்ரோன் (Drone) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யானை ஆரோக்கியமாக குணமடைந்து வனப்பகுதிக்குள் பத்திரமாகச் சேரும் வரை கண்காணிப்பு நீடிக்கும் என்றும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: