Advertisment

ரவுடி ஸ்ரீதர் தனபால் மரணம் : மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதர் தனபால் உடலை இந்தியா கொண்டுவர உரிய ஆவண அனுமதியை மத்திய அரசு 24 மணி நேரத்தில் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sridhar dhanapal, tamilnadu, government of india, tamilnadu police, kancheepuram, chennai high court

காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதர் தனபால் உடலை இந்தியா கொண்டுவர உரிய ஆவண அனுமதியை மத்திய அரசு 24 மணி நேரத்தில் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

காஞ்சீபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடியான ஸ்ரீதர் மீது சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்புடைய ஸ்ரீதர், வழக்குகளில் ஆஜராகாததால் காஞ்சீபுரம் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தால் கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கபட்டது.

மேலும் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உத்தரவிட பட்டது. துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று பங்கியிருப்பதாக கூறப்பட்டு வந்தது.

அவரது பாஸ்போர்டுக்கான காலக்கெடு முடிவடைய உள்ளதால், அதை புதுப்பிக்க இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கம்போடியாவில் ஸ்ரீதர் தனபால் தற்கொலை செய்துகொண்டதாக அவரது குடும்பத்தினருக்கு அக்டோபர் 4 ஆம் தேதி தகவல் கிடைத்தது. மேலும் லண்டனில் உள்ள மகன் சந்தோஷ்குமார் அளித்த தகவலின்படி, கம்போடியாவில் உள்ள கீமா மருத்துவமனைக்கு ஸ்ரீதர் தனபாலின் மகள் தனலட்சுமி தனது வழக்கறிஞர் குழுவுடன் சென்று இறந்தது ஸ்ரீதர் தான் என்பதை உறுதி செய்துவிட்டு இந்தியா திரும்பியுள்ளார்.

பின்னர் தனது தந்தை உடலை கம்போடியாவிலிருந்து இந்தியா கொண்டுவர காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் தனலட்சுமி மனு கொடுத்துள்ளார். ஆனால் அதிகாரிகளிடமிருந்து உரிய பதில் இல்லாததை அடுத்து அவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில் தனது தந்தை ஸ்ரீதர் தனபாலின் உடலை மீட்கும் விவவாரத்தின் தீவிரத்தன்மை உணராமல் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்துவதால், தன் மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.

இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாராணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், ஸ்ரீதர் தனபால் பாஸ்போர்ட் கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிகளால் முடக்கப்பட்டு விட்டது. மேலும் அவர் இலங்கை குடிமகன் என்று காட்டி அங்குள்ள பாஸ்போர்ட் மூலம் கம்போடியா சென்றுள்ளார்.

எனவே கம்போடிய அரசு இலங்கைக்கு தான் அவரது உடலை அனுப்ப எக்சிட் (exit) அனுமதி வழங்கும். எனவே அவரது உடலை இந்தியா கொண்டு வருவதில் சட்ட சிக்கல் உள்ளது. இருந்தாலும் ஸ்ரீதர் தனபால் உடலை இந்தியா கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதி, இலங்கை பாஸ்போர்ட்டில் ஸ்ரீதர் கம்போடியா சென்றாலும், அவருக்கு ஏற்கனவே இந்திய அரசும் பாஸ்போர்ட் வழங்கியுள்ளது, அவர் இந்திய குடிமகன் என்தற்கான ஆதாரங்களை மனுதரார் தாக்கல் செய்துள்ளார். எனவே அதனடிப்படையில் ஸ்ரீதரின் உடலை இந்தியா கொண்டு வர முடியாதா ? என்பதை மத்திய வெளியுறவுத்துறையிடம் கேட்டு இன்றே தெரிவிக்க மத்திய அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்தார்.

மீண்டும் மதியம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தனலட்சுமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.குமார் ஆஜராகி, கம்போடிய அரசு உடலை ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும், ஆனால் இந்திய அரசு ஆட்சேபனை தெரிவிக்காவிட்டால் ஸ்ரீதர் உடலை இந்தியா கொண்டுவருவதில் சிக்கல் ஏதும் இல்லை என தெரிவித்தார்.

மத்திய வெளியுறவுத்துறை தரப்பில் உதவி கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சு.சீனிவசன் ஆஜராகி, இன்று மதியம் 2 மணி அளவில் கம்போடிய அரசுடனான இ-மெயில் போக்குவரத்தின்படி, இந்தியாவிடம் உடலை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அவரின் உடலை இந்தியா கொண்டுவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும் என தெரிவித்தார்.

இவற்றை பதிவுசெய்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், கம்போடிய மருத்துவமனையில் உள்ள ஸ்ரீதர் உடலை இந்தியா கொண்டுவருவதற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் மத்திய அரசு 24 மணிநேரத்தில் வழங்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

 

Chennai High Court Kancheepuram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment