Advertisment

திருச்சியில் கொரோனா நோயாளி மீது கொலை முயற்சி வழக்கு: டாக்டர்கள் மீது எச்சில் துப்பியதாக புகார்

திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளி, மருத்துவர்கள் மீது எச்சில் துப்பி முக கவசம் வீசியதால் 3 கொரோனா நோயாளிகள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
attempt to murder case filed against covid-19 positive patients, கொரோனா நோயாளிகள் மீது கொலை முயற்சி வழக்கு, திருச்சி, fir filed againts covid-19 postive patients, covid-19 positive patients spit on doctor in Tiruchi, doctor complaint against covid-19 postive patients, latest corona news, latest coronavirus news, lates tamil nadu coronavirus news

திருச்சி அரசு பொது மருத்துவமனையில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், தென்னூரைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், அவருடைய குடும்பத்தினருக்கும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா பாதித்த நபரின் அம்மாவுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, ஏப்ரல் 10-ம் தேதி திருச்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், கொரோனா பாதிக்கப்பட்ட நபரை அழைத்துவர சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

இந்த விவகாரம், திருச்சி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த கொரோனா பாதித்த நோயாளிக்கு தெரியவந்ததையடுத்து, அவர் மருத்துவர்களிடமும் மருத்துவப் பணியாளர்களிடமும் ஏன் வீடியோ எடுக்க அனுமதித்தீர்கள் என்று கேள்வி எழுப்பி கடுமையாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. அதற்கு சுகாதாரப் பணியாளர்கள் யாரோ சிலர் தெரியாமல் செய்திருக்கிறார்கள் என்று சமாதானம் கூற கொரோனா பாதித்த நோயாளிக்கும் மருத்துவர்கள் மருத்துவப் பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, கொரோனா பாதித்த நபருடன் மற்ற கொரோனா பாதித்த நோயாளிகளும் சேர்ந்து கொண்டு எங்களுடன் நீங்களும் கொரோனாவில் சாவுங்கள் என்று கூறி மருத்துவர் மீது எச்சில் துப்பி முக கவசம் வீசியதாக கூறப்படுகிறது.

ஆபத்தான கொரோனா வைரஸ் எச்சில் மூலம் பரவும் என்பதால், மருத்துவர் மீது எச்சில் துப்பி முக கவசம் வீசிய கொரோனா பாதித்த நோயாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண் மருத்துவர் காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து, தகராறில் ஈடுபட்ட, கொரோனா பாதித்த நோயாளிகள் 3 பேர் மீது கொலை முயற்சி, அரசு மருத்துவரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளில் போலீசா வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”
Coronavirus Tiruchi District
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment