பெங்களூருவை சேர்ந்த தகவல் அறியும் ஆர்வலர் நரசிம்மமூர்த்தி என்பவர் கர்நாடக அரசுக்கு கடிதம் ஒன்று எழுதியிருந்தார். இந்தக் கடிதத்துக்கு கர்நாடக அரசு பதில் அளித்தள்ளது.
அந்தப் பதிலில், ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விடுவது தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் வழக்கறிஞர் மேற்கொள்வார் எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஏல நடைமுறைகளை மேற்கொள்ள வழக்குரைஞர் கிரண் எஸ் ஜாவலி என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா சுதாகரன் இளவரசி ஆகியோரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் மற்றும் சொத்துக்களை கர்நாடக அரசு ஏலம் விட உள்ளது.
இதற்கிடையில், தமிழ்நாட்டின் நீலகிரி கொடநாட்டில் உள்ள 800 ஏக்கர் பரப்பளவிலான எஸ்டேட் மற்றும் பங்களாவை வருவாய் மீட்புச் சட்டத்தின்கீழ் தி.மு.க. அரசு தன்வசப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கொடநாடு சொத்து மதிப்பு மட்டும் பல நூறு கோடி ரூபாய் வரம். இதனைப் றிமுதல் செய்து அரசின் தேவைக்குப் பயன்படுத்தவோ அல்லது ஏலம் மூலம் விற்பனை செய்யவோ மாநில அரசுக்கு உரிமை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“