Advertisment

தமிழக அரசு வழக்கு: ஆளுநருக்கு ஆதரவாகப் பேசும் அட்டர்னி ஜெனரலின் 35 பக்கக் குறிப்பு

டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்கள் தேர்வு நடைமுறையில் முழுவதும் வெளிப்படைத் தன்மை இல்லை என அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
RN Ravi Case

தமிழ்நாடு அரசு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கால தாமதம் செய்வதாகவும், மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்கும் வகையில் ஆளுநருக்கு கால நிர்ணயம் செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 

Advertisment

இந்த வழக்கு  நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பிலும் காரசார விவாதம் நடைபெற்றது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ஆளுநர் ஆர்.ரவி தரப்புக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். 

உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி தரப்பில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி வாதாடினார். அப்போது அவர் சமர்ப்பித்த குறிப்பில்,  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு அரசியலமைப்பு அதிகாரியாக மாநில அரசின் வெளிப் படைத்தன்மை குறைவு மற்றும் விதிமுறைகள் புறக்கணிக்கப்படுவதற்கு எதிராகப் போராடுகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் (டி.என்.பி.எஸ்.சி)  தேர்வு நடைமுறையில் முழுமையான வெளிப்படைத் தன்மை இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. 

ஆளுநர் சார்பாக வழங்கப்பட்ட அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணியின் குறிப்பில், "தலைவராக நியமிக்க தேர்வு செய்யப்பட்ட நபர் ஒரு வருடத்திற்கும் குறைவான காலம் பதவியில் இருப்பார். தேர்வு செய்யப்பட்ட மற்றொரு நபர் இணைப் பேராசிரியராகப் பணிபுரிந்த கல்லூரியில் தவறான நிர்வாகத்திற்காக இடைநீக்கம் செய்யப்பட்டவர்" என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தக் குறைகளை மாநில அரசு கூறவில்லை. அதனால் மாநில அரசு அனுப்பி வைத்த ஆணையை அக்டோபர் 26-ம் தேதி அரசுக்கு திருப்பி அனுப்பட்டது. அது ஆளுநர் அலுவலகத்தில் நிலுவையில் இல்லை என்று கூறியது. 

பாரதியார் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமிப்பதற்கான தேடல் மற்றும் தேர்வுக் குழு விவகாரம் அரசு மற்றும் ஆளுநருக்கு இடையிலான மற்றொரு சர்ச்சையாகும். "யுஜிசி விதிமுறைகளின்படி அரசாங்கம் குழுவை மறுசீரமைக்கவில்லை. பலமுறை கூறியும் அரசு செய்யவில்லை. அதனால் வேந்தர் என்ற முறையில் ஆளுநர் யுஜிசி உறுப்பினர் ஒருவரை சேர்த்து தேடல் மற்றும் தேர்வுக் குழுவை மீண்டும் அமைத்து அறிவிக்கப்பட்டது. 

சென்னை பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை, பல்கலைக்கழக வேந்தராக உள்ள ஆளுநர், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தலைவரின் பரிந்துரையாளரைச் சேர்த்து, தேடல் மற்றும் தேர்வுக் குழுவை அமைத்துள்ளார்.

அதோடு, கைதிகள் விடுதலை தொடர்பாக அரசு முன்வைத்த 580 பேரில் 362 கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். 

அடுத்ததாக, முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது வழக்கு தொடர்வது தொடர்பான அறிவிப்பில், ஆளுநர்  முறையாக அங்கீகரிக்கப்பட்ட விசாரணை அறிக்கையை அரசிடம் கேட்டதாகவும், ஆனால் "பல அங்கீகரிக்கப்படாத தளர்வான தாள்கள்" மட்டுமே கிடைத்ததாகவும் கூறினார்.

வணிக வரித் துறை முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்த சி.விஜய பாஸ்கர் ஆகியோர் மீது நவம்பர் 13-ம் தேதி வழக்கு தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்கு தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.  தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜி.பாஸ்கரன் மீது விசாரணை நடத்த நவம்பர் 18ஆம் தேதி அனுமதி வழங்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Governor Rn Ravi Tamilnadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment