Advertisment

சென்னை விமான நிலையத்தில் ஆஸ்திரேலிய இயக்குனருக்கு தடை: கூடங்குளம் போராட்டம் தான் காரணமா?

தென் தமிழ்நாட்டில் கூடங்குளத்தில் நடைபெற்ற அணு உலை எதிர்ப்பு போராட்டங்கள் குறித்த ஆவணப்படத்திற்காக அறியப்பட்டவர் இயக்குனர் டேவிட் பிராட்பரி.

author-image
WebDesk
New Update
Chennai Airport David Bradbury

ஆஸ்திரேலிய திரைப்பட இயக்குனரும் 2 முறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டவருமான டேவிட் பிராட்பரி சென்னை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு தாய்லாந்துக்கு நாடு கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

தென் தமிழ்நாட்டில் கூடங்குளத்தில் நடைபெற்ற அணு உலை எதிர்ப்பு போராட்டங்கள் குறித்த ஆவணப்படத்திற்காக அறியப்பட்டவர் இயக்குனர் டேவிட் பிராட்பரி. ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த இவர், 2 முறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இவர் தனது மகள் நகீதா (21) மற்றும் மகன் உமர் (14) ஆகியோருடன் இந்தியா முழுவதும் குடும்பப் பயணமாக சுற்றுலா வந்துள்ளார்.

இதனிடையே கடந்த செப்டம்பர் 11ந் தேதி டேவிட் பிராட்பரி தனது மகள் மற்றும் சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட அவர், நாட்டை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் அவர் எதற்காக தடுத்து நிறுத்தப்பட்டார் என்று விளக்கமளிக்காமல் காவலில் வைக்கப்பட்டு தாய்லாந்திற்கு நாடு கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவரை ஒரு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, 24 மணிநேரம் காவலில் வைக்கப்பட்டார். அதன் பின்னர் கட்டாயமாக தாய்லாந்து விமானத்தில் ஏற்றப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார். இது குறித்து அவரது மகள் நகீதா கூறுகையில், அதிகாலை 3 மணிக்கு, எங்களை விமான நிலையத்தை விட்டு வெளியேறுமாறு கூறினார்கள். ஆனால் என் அப்பாவைப் பற்றிய விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அவர் தாய்லாந்திற்கு வந்த பிறகுதான் எங்களை தொடர்புகொண்டார் என்று கூறியுள்ளார்.

பிராட்பரி தனது இறந்த கூட்டாளியான ட்ரீனா லென்தாலுக்கு "கண்டுபிடிப்பு மற்றும் நினைவு பயணமாக" இந்தியா முழுவதும் ஒரு பயணத்தை திட்டமிட்டிருந்தார். அவருடன் வந்தவர்கள், புதுச்சேரி, சேலம், கேரளா, வாரணாசி மற்றும் புது தில்லி வழியாக தங்கள் பயணத்தைத் தொடர முடிவு செய்த நிலையில், பிராட்பரி மகள் மற்றும் மகன் இருவரும், இந்த பயணத்தில் இருந்து விலகி, மிலனில் தங்கள் தந்தையுடன் மீண்டும் இணைவதற்காக இந்தியாவை விட்டு வெளியேறினர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டங்கள் குறித்த அவரது ஆவணப்படம் காரணமாக தனது தந்தை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ள நகீதா, இது குறித்து எந்த உறுதியான தகவலும் கூறவில்லை. சென்னையில் உள்ள வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்தின் (FRRO) அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, "இந்த விஷயத்தை பரிசீலிப்பதாக" தெரிவித்தனர். ஆனாலும், இது பற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

எங்களுடன் வந்தவர்கள் கூகுள் மேப்ஸ் (Google Maps) மற்றும் உள்ளூர்வாசிகள் உதவியை நம்பி இரண்டு வாரங்கள் நீடித்த பயணத்தை முடித்தனர். "நாங்கள் பல முறை ஏமாற்றப்பட்டோம். பெட்ரோல் பங்க்கள், டோல் கேட்கள் மற்றும் ஹோட்டல்களில் எங்களிடம் சீரற்ற முறையில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இது நியாயமில்லை என்று நகீதா தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment