/tamil-ie/media/media_files/uploads/2018/09/2-31.jpg)
தமிழிசை
பெட்ரோல் விலை குறித்து கேள்வி எழுப்பிய ஆட்டோ டிரைவரை பாஜகவினர் சரமாரியாக அடித்து துன்புறுத்திய பரபரப்பு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2 நாட்களாக பாஜவிற்கு சோதனைக் காலம் போல.. தமிழ்நாட்டில் அடுத்தடுத்து பரபரப்பான சர்ச்சைகளில் பாகஜவினர் சிக்கி கொண்டு வருகின்றனர். கடந்த சனிக்கிழமை நீதிமன்றம் குறித்க்து அவதூறாக பேசிய பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகினர்.
இந்த சர்ச்சை ஓய்வதற்குள் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னை சைதாப்பேட்டையில் பாஜக மாநில தலைவர் தமிழிசை நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசிக் கொண்டிருக்கும் போது, அவருக்கு பின்புறம் வயதான ஆட்டோ டிரைவர் ஒருவர் வந்தார்.
பின்பு, அவர் தமிழிசையை நோக்கிய வாறு, பெட்ரோல் டீசல் விலை தினமும் உயருகிறதே என்று கேள்வி எழுப்பினார். அதற்கு தமிழிசை பதில் எதுவும் சொல்லாமல் சிரித்துக் கொண்டே மழுப்பினார். உடனே சுதாரித்துக் கொண்ட பாஜகவினர், தமிழிசை இருக்கும் போதே, கேள்வி கேட்ட அப்பாவி ஆட்டோ டிரைவரை பின்னால் இழுத்து சென்று சரமாரியாக அடித்து துன்புறுத்தினர்.
இந்த சம்பவத்தை கண்டும் காணாதவாறு தமிழிசை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக தலைவர் தமிழிசையிடம் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறித்து கேள்வி எழுப்பிய ஆட்டோ டிரைவர் மீது பாஜகவினர் தாக்குதல்!@Saislakshmanan@kavithamurali@rajakumaari@am_Lavu@Priyan_reports@madhavpramod1@subashprabhu#FuelPriceHike#Tamilisaisoundararajan#BJP
Video: @TimesNowpic.twitter.com/lMkwpCQdYZ— Jeeva Bharathi (@sjeeva26) 17 September 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.