கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு 25 வயதான இளம்பெண் ஒருவர் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், “மர்ம நபர் ஒருவர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி எனது ஆபாச படங்களை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என மிரட்டுகிறார்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் உத்தரவிட்டார்.
இதையடுத்து, சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் வசந்தி தலைமையிலான போலீசார் குற்றவாளியை பிடிக்க களத்தில் இறங்கினர்.
இந்த நிலையில் அவரை பொறி வைத்து பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சம்பந்தப்பட்ட நபர் மூணாறு பகுதியைச் சேர்ந்த இருளப்பன் என்பவர் மகன் ராஜ்குமார் (வயது 39) என்பது தெரியவந்தது.
மேலும் அவர் மதுரையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இது தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது.
செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/