Advertisment

ரைடு- ஹைலிங் ஆப், கட்டண திருத்தம் கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு

அரசு சொந்த செயலி, கட்டண திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
TN Auto drivers to hold strike

TN Auto drivers to hold strike

ரைடு-ஹைலிங் செயலி மற்றும் கட்டண திருத்தம் போன்ற நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோரிக்ஷா ஓட்டுநர்கள் சங்கம்

அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மே மாதம் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Advertisment

தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் செயல் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் கூறுகையில், "நல வாரியத்தின் நிதியில் அரசு சொந்தமாக ஓலா, உபேர் போன்று ரைடு-ஹைலிங் செயலி வெளியிட வேண்டும் என ஆட்டோரிக்ஷா ஓட்டுனர்கள் சங்கங்கள் அரசுக்கு தொடர்ந்த கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்றார்.

மேலும் கூறுகையில், கேரள அரசு தனது சொந்த செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. தனியார் ஆட்டோ செயலி நிறுவனங்கள் மறைமுக கட்டணம் மூலம் பயணிகளையும் ஓட்டுநர்களையும் ஏமாற்றுகின்றன. அரசாங்கம் அதன் சொந்த செயலியை அறிமுகப்படுத்தினால், அது அனைத்து பங்குதாரர்களுக்கும் பயனளிக்கும்" என்று கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், "கடந்த 2013-ம் ஆண்டு ஆட்டோரிக்‌ஷா கட்டணம் திருத்தம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆட்டோ கட்டணத்தை திருத்தம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, இணை ஆணையர் தலைமையில் அரசு குழு அமைத்தது. மே 12-ம் தேதி தொழிற்சங்கங்கள் மற்றும் பயணிகள் சங்கத்தின் கருத்துகளை கேட்டறிந்தனர். பின்னர் ஆலோசனையை தொடர்ந்து, கட்டண திருத்தம் குறித்து போக்குவரத்து துறை மௌனம் காத்து வருகிறது,'' என்றார்.

இப்போது குறைந்தபட்சக் கட்டணம் ரூ.50 ஆகவும், கிலோ மீட்டருக்கு ரூ.25 ஆகவும் உயர்த்தி வழங்க ழிற்சங்கங்கள் கோரிக்கை விடுக்கின்றன. தற்போது முதல் 1.8 கி.மீ.க்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.25 ஆகவும், கூடுதல் கி.மீ.க்கு ரூ.12 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

மேலும் தங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் பைக் டாக்ஸிகளையும் தடை செய்ய வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்லி மற்றும் மகாராஷ்டிரா அரசு பைக் டாக்ஸிகளுக்கு தடை விதித்துள்ளது. தமிழக அரசும் அதை செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர். ஆட்டோரிக்ஷா ஓட்டுநர்களுக்கு தி.மு.க அரசு அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவும், மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Dmk Tamilnadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment