அவன்யாபுரம் ஜல்லிகட்டு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்பட தமிழக அமைச்சர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தானர்.
இந்நிலையில் மிகவும் அசத்தலான தொடங்கியது ஜல்லிகட்டு, மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. முதலமைச்சர் சார்பில் கார் பரிசாக வழங்கப்படுகிறது. மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் 2 பைக்குகள் பரிசாக வழங்கப்படுகிறது.
இதுவரை நடந்த போட்டியில் மாட்டு உரிமையாளர்கள் 16 பேர், மாடுபிடி வீரர்கள் 7 பேர், பார்வையாளர்கள் 5 பேர் , காயமடைந்துள்ளனர். 13 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் காளை முட்டியதில் ஆயுதப்படை காவலர் உள்பட 19 பேர் காயமடைந்துள்ளனர். இதில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 9 பேர் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போட்டியை கமெண்டரி செய்யும் நபர் மிகவும் சுவாரஸ்யமாக பேசி வருகிறார். ”5 மணி வரை யாரும் ஓயக் கூடாது எல்லா மாட்டையும் அவுத்து விட்டுறுவோம். துணிவோடு வாரிசு பிடிச்சிட்டாருப்பா, ராக்கி பாய் முடிஞ்சா தொட்டு பாரு. என்று போட்டியை விவரிக்கும் விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது.