கோவை கே.ஜி கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் திவ்யலட்சுமியை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் சிறந்த பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், சரவணம்பட்டி கே.ஜி.ஐ.எஸ்.எல். கல்லூரி வளாகத்தில் இதன் ஆறாம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளின் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
அதன்படி, இந்தியாவில் ஐ.டி. பெண்கள் இயக்க முன்னோடியும், தொழில் முனைவோருமான கீதா கண்ணன், மாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான வழக்கறிஞர் அஷ்வினி, ஓய்வு பெற்ற மத்திய ரிசர்வ் படை அதிகாரி அபரஜிதா ரம்தயானி, வயநாடு நிலச்சரிவின் போது மருத்துவ பணியாற்றிய செவிலியர் சபீனா ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இதேபோல், சுதந்திர போராட்ட தியாகி லட்சுமி கிருஷ்ணன், புல்டோசர் உள்ளிட்ட கனரக வாகன சாகச ஓட்டுனர் ராதாமணி உள்ளிட்டோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், வர்ணபந்தம் என்ற தலைப்பில் நடைபெற்ற தேசிய கலை கண்காட்சியை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
கே.ஜி குழுமத்தின் தலைவர் டாக்டர் பக்தவத்சலம், கே.ஜி.ஐ.எஸ்.எல். அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் அசோக் பக்தவத்சலம் ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
செய்தி - பி.ரஹ்மான்