தமிழகத்தில் நாளுக்கு நாள் போதைப் பொருட்களை இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
போதைப் பொருட்களால் தொடர்ந்து தமிழகத்தில் அடுத்தடுத்த குற்ற சம்பவம் நடைபெற்று வருகிறது.
அதனை தடுக்கும் வண்ணமாக இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து சைக்கிள் பேரணி தொடங்கியது.
சைக்கிள் பேரணியில் 16 வயது முதல் இளைஞர்கள், பெரியவர்கள் வரை பலர் கலந்து கொண்டனர். சைக்கிள் பேரணியை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் ஆணையர் பாலகிருஷ்ணன், பொது மக்களுடன் சேர்ந்து சைக்கிள் பேரணியில் பயணம் செய்தார். பேரணியில் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து தொடங்கி டவுன் ஹால், செட்டி வீதி, பேரூர், பச்சாபாளையம், ஆலந்துறை, மாதம்பட்டி, சாடி வயல், ஈசா யோகா சென்று அடையும்.
அதன் பின் அங்கிருந்து புறப்பட்டு அதே வழியாக வந்து இறுதியாக அவிநாசி சாலையில் உள்ள பி.ஆர்.எஸ் மைதானத்தில் நிறைவடையும். சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டவரகள் மைதானத்தில் உறுதி எடுக்கின்றனர்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“