வரலாற்று சிறப்பு மிக்க அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று(நவ.,09) தீர்ப்பளிக்க உள்ளது தொடர்பான வழக்கில் இன்று காலை 10:30 மணிக்கு ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு என்பது இன்று தெரியவர உள்ளது.
தீர்ப்பு வெளியாக உள்ளதை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தியில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதால் அங்கு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அயோத்தி வழக்கு கடந்து வந்த சிக்கல்கள்- முழு ரிப்போர்ட்
தமிழகத்திலும் பாதுகாப்பு அதிகரிப்பு : தீர்ப்பு வெளியாக உள்ளதை தொடர்ந்து தமிழகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ரயில்வே ஸ்டேசன், விமான நிலையம், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிகளவிலான போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு சீர்குலைவை தடுக்க போலீசார் முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Live Blog
Ayodhya case verdict - Tamilnadu live updates : அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், தமிழகத்தில் அதுதொடர்பாக நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இங்கு உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அயோத்தி தீர்ப்பு குறித்து பேசிய அவர், ‘உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நான் மதிக்கிறேன். அனைவரும் மதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்திய நாட்டின் நன்மைக்காகவும், வளர்ச்சிக்காகவும் அனைத்து மதத்தினரும் மத வேறுபாடின்றி ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்’ என கூறினார்.
நீண்டகாலமாக நடைபெற்று வந்த பிரச்னைக்கு உச்சநீதிமன்றம் தீர்வு கண்டுள்ளது. இந்த தீர்ப்பை அனைத்து மதத்தினரும் சமமான சிந்தனை, மதநல்லிணக்கத்துடன் முன்னெடுக்க வேண்டும். இந்த தீர்ப்பை எந்தவித விருப்பு, வெறுப்புக்கும் இடம்கொடுக்காமல், சமமான சிந்தனையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அயோத்தி வழக்கில் நாட்டின் உயரிய சட்ட அமைப்பான உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை, தீர்ப்பாக மட்டுமே கருதி அனைத்துத் தரப்பினரும் அணுகிட வேண்டும். இந்த நேரத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கடைபிடிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இந்தியர் என்ற உணர்வோடு, அடுத்தவருக்குப் பாதிப்பில்லாமல் அவரவர் நம்பிக்கையைப் போற்றியபடி, தொடர்ந்து ஒற்றுமையுடன் திகழ்ந்திடுவோம் என்று அமமுக கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
பாபர் மசூதி வழக்குத் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்தையும் ஆதாரங்களையும் வைத்து அளிக்கப்பட்ட தீர்ப்பாக அமையவில்லை. சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டும் சமூக நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டும் சமரச முயற்சியின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பாக அமைந்துள்ளது என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
அயோத்தி வழக்கில் நியாயமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளதாவது, அயோத்தியில் ராமர் கோயிலும் கட்டலாம், பாபர் மசூதியும் கட்டலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இரு தரப்பிற்கும் சாதகமான தீர்ப்பே வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பை அனைவரும் மதித்து நடக்கவேண்டும் எ்னறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அயோத்தி வழக்கு தொடர்பாக அவசரப்பட்டு கருத்து தெரிவிப்பதோ, வதந்திகளை பரப்புவதோ கூடாது. முகநூல், வாட்ஸ் ஆப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அடுத்த சில நாட்களுக்கு சர்ச்சைக்குரிய செய்திகளை பரப்புவதைக் கைவிட வேண்டும். காட்சி ஊடகங்களிலும் அயோத்தி நில தீர்ப்பு குறித்த விவாதங்களை தவிர்ப்பது நலம் பயக்கும். அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு எந்த ஒரு தரப்புக்கும் வெற்றியோ, தோல்வியோ அல்ல. அது நீண்டகாலமாக இருந்து வரும் ஒரு நிலச் சிக்கலுக்கு முன்வைக்கப்படும் தீர்வாகவே பார்க்கப்பட வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அயோத்தி தீா்ப்பு வெளியாவதையொட்டி பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை அளிக்கப்படவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சூழ்நிலைக்கேற்ப முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் முடிவெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை தொடர்ந்து அமைதிப் பூங்காவாக திகழச்செய்து இந்தியாவிற்கே நம் மாநிலம் முன்னுதாரணமாக இருப்பதற்கு அனைத்து மத தலைவர்கள், அனைத்து கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பு மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தீர்ப்பு வெளியாக உள்ளதை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தியில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதால் அங்கு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கண்காணிப்பு பணியில் 'ட்ரோன்கள்' எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வாகனங்களில் செல்வோரை தீவிர பரிசோதனை செய்த பின்பே போலீசார் அனுப்பி வைக்கின்றனர். பாதுகாப்பு பணியில் உள்ளூர் போலீசார் போக துணை ராணுவ படையினர் பயங்கரவாத தடுப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சர்ச்சைக்குரிய நிலத்தில் கட்டப்பட்டுள்ள தற்காலிக ராமர் கோவிலை சுற்றி அமைக்கப்பட்டுள்ள வேலிகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights