Advertisment

ஆயுதபூஜை, தீபாவளி விடுமுறை; அடுத்த 2 மாதங்கள் 34 சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

ஆயுதபூஜை, தீபாவளி விடுமுறை நாட்களையொட்டி தமிழகத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
train xxx1

நாடு முழுவதும் ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகைகளும், வடமாநிலங்களில் சாத் பண்டிகையும் வரும் மாதங்களில் கொண்டாடப்பட உள்ளன. இதையொட்டி மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக தமிழகத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

Advertisment

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பண்டிகை காலத்தில், சொந்த ஊருக்கு ரயிலில் செல்லும் மக்கள் நெரிசல் இன்றி பயணிக்கும் வகையில், சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் மொத்தம் 302 பயணங்களுடன் 34 சிறப்புரயில்களை இயக்குவதாக தெற்குரயில்வே அறிவித்துள்ளது. இவற்றில், 268 பயணங்கள் அடங்கிய 28 சிறப்பு ரயில்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான முன்பதிவு நடைபெறுகிறது.

கடந்த ஆண்டில் இதே காலக்கட்டத்தில் 130 பயணங்களுடன் 49 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டு பயண எண்ணிக்கை குறிப்பிட்டத்தக்க அளவு அதிகரித்துள்ளது. பண்டிகை மாதங்களில் கடைசி நேர நெரிசல் மற்றும் காத்திருப்புப் பட்டியலைத் தவிர்க்க, பயணிகள் முன்கூட்டியே டிக்கெட்களை முன்பதிவு செய்ய வேண்டும். 

சிறப்பு ரயில்களின் விரிவான அட்டவணைகள், வழித்தடங்கள் மற்றும் நேரங்கள் ஆகியவை அதிகாரப்பூர்வ தெற்கு ரயில்வே இணையதளம் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி போர்ட்டல்களில் கிடைக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment