ayyakannu : பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிட போவதில்லை என்று விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் நிற்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாளே பரபரப்பு தகவல் ஒன்று தீயாக பரவியது. பிரதமர் மோடியை எதிர்த்து அவர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் போட்டியிட போவதாகவும் அதுமட்டுமின்றி தன்னுடன் நூற்றுக்கணக்கான விவசாயிகளும் அதே தொகுதியில் போட்டியிட போவதாக விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு அறிவித்திருந்தார்.
அய்யாக்கண்ணுவின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.விவசாயிகள் கோரிக்கை தொடர் நிராகரிப்பு, நதிநீர் இணைப்பு போன்ற விவசாயிகளின் தொடர் கோரிக்கைகளை மோடி அரசாங்கம் நிராகரித்தால் இத்தகைய முடிவை அய்யாக்கண்ணு துணிந்து எடுத்திருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், நேற்றைய தினம்,விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு டெல்லியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்தார்.அமித்ஷாவுடனான இந்த சந்திப்பின்போது சந்திப்பில் பியூஷ் கோயல் மற்றும் அமைச்சர் தங்கமணியும் கலந்து கொண்டுள்ளனர். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு பாஜக தேர்தல் அறிக்கையில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் தந்தால் வாரணாசியில் போட்டியில்லை. என்று தெரிவித்தார்.
மேலும் விவசாயிகளைக்கு தேவையான வாக்குறுதியை பாஜக அளித்துள்ளதால் 111 விவசாயிகள் பிரதமர் மோடிக்கு எதிராக போட்டியிடமாட்டோம்’ என்று கூறியுள்ளார். அய்யாக்கண்ணுவின் இந்த திடீர் பல்டி மற்ற விவசாயிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது