ஆழியார் அணையில் நீர் திறப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை

ஆழியார் அணை முழு கொள்ளளவு 120 அடியில் 118 அடியை எட்டியுள்ளது.

author-image
WebDesk
New Update
Azhiyar Dam has reached its full capacity

ஆழியாறு அணை முழுக் கொள்ளளவை எட்டியது

தொடர் மழையால் ஆழியார் அணையில் இருந்து மூன்று மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், கரையோர பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

கடந்த சில நாள்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அப்பர், ஆளியார், காடம்பாறை போன்ற அணைகளில் இருந்து ஆழியார் அணைக்கு நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.

மேலும் ஆழியார் அணை முழு கொள்ளளவு 120 அடியில் 118 அடியை எட்டியுள்ளது. அணைக்கு தற்பொழுது வினாடிக்கு 1100 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஆயிரத்து 36 கன அடி உபரி நீர் மூன்று மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டுகிறது.

மழை பொழிவு அதிகரித்துக் கொண்டே இருப்பதால் தொடர்ந்து பொதுப்பணி துறையினர் கண்காணிப்பை தீவிர்படுத்தி உள்ளனர். மேலும், ஆழியார் ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள் துணி துவைக்க குளிக்க ஆற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என பொதுப்பணித்துறை காவல்துறை மற்றும் வருவாய் துறை மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.

Advertisment
Advertisements

செய்தியாளர் பி. ரஹ்மான்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: