Babri Masjid demolition: SDPI (Social Democratic Party of India) protest in major cities of tamilnadu Tamil News
பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
Advertisment
பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று முக்கிய நகரங்களில் இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை உக்கடம் பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் முஸ்தபா தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீத் முன்னிலையில் மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிட கழகப் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 200"க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ஹமீத் பேசியதாவது:-
எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணை தலைவர் - அப்துல் ஹமீத்
பாசிச எதிர்ப்பு தினம் என்ற கோரிக்கையை முன்வைத்தும், பாபர் மசூதியை மீட்டு தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நாடு முழுவதிலும் உள்ள மதசார்பற்ற அரசுகள் அனைத்தும் பாபர் மசூதி வழக்கில் ஒன்றிய அரசுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் பாபர் மசூதி மீட்பு தீர்ப்பு என்ற ஒன்று எழுதப்பட வேண்டும்." என்று அவர் கேட்டுக் கொண்டார்.
ஆர்ப்பாட்டத்தில் செய்தி தொடர்பாளர் மன்சூர் உட்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாபர் மசூதி இடிப்பு தினம்: திருச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்
க.சண்முகவடிவேல்
பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று (டிசம்பர் 06) பாசிச எதிர்ப்பு தினம் என்ற பெயரில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அவ்வகையில், இன்று திருச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட பொது செயலாளர் தமீம் அன்சாரி வரவேற்புரையாற்றினார். தெற்கு மாவட்ட செயலாளர்கள் ஏர்போர்ட் மஜீத், மதர் ஜமால் முஹம்மது,மாவட்ட செய்தி தொடர்பாளர் Dr.S.பக்ருதீன்,தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தளபதி.அப்பாஸ், பொன்னகர்ரபீக், மர்சூக் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொது செயலாளர் அஹமது நவவி, நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை. துரை முருகன், ஜமாத்துல் உலமா சபையின் திருச்சி மாவட்ட பொருளாளர் மௌலானா. அமீன் யூசுஃபி ஆகியோர்கள். கண்டன உரையாற்றினர்.
வழிபாட்டுத் தலங்கள் சட்டம்-1991 ஐ வலுவாக அமல்படுத்தி அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் மத்திய, மாநில அரசுகளும், நீதித்துறையும் பாதுகாக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவெறும்பூர் தொகுதி தலைவர் அப்பாஸ் மந்திரி, கிழக்கு தொகுதி தலைவர் அப்துல் காதர், வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் அப்துல் மாலிக், SDTU மாவட்ட தலைவர் முஸ்தபா, மருத்துவர் அணி தலைவர் Dr. இக்பால், சுற்றுச் சூழல் அணி தலைவர் SS.ரஹ்மதுல்லா, தொண்டரணி தலைவர் டோல்கேட். அன்சாரி,விம் மாவட்ட தலைவர் மூமினா பேகம், மற்றும் தொகுதி, கிளை, அணி, நிர்வாகிகள், ஜமாதார்கள், பொதுமக்கள் பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.