/tamil-ie/media/media_files/uploads/2023/08/crocodile.jpg)
.5 அடி நீளமுள்ள முதலை வீட்டின் நீச்சல் குளத்தில் கண்டெடுக்கப்பட்டது
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான டி.எஸ்.பாலையாவின் பேரன் வீட்டின் நீச்சல் குளத்தில் 1.5 அடி நீளம் கொண்ட முதலைக்குட்டி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர்களின் முக்கியமானவர் டி.எஸ்.பாலையா. தனது நடிப்பின் மூலம் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இவரது பேரன் பாலாஜ தங்கவேல். பாஜகவின் செயல்பாட்டாளராக இருக்கும் இவர், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட ஒ.பி.சி அணியின் மாவட்ட தலைவராக உள்ளார்.
பாலாஜி தங்கவேல் தனது மனைவி மற்றும் மகனுடன், செங்கல்பட்டு மாவட்டம் நெடுங்குன்றம், பகுதியில் உள்ள தனது சொகுசு வீட்டில் வசித்து வருகிறார். இதனிடையே நேற்று தனது வீட்டில் நீச்சல் குளத்தில் உள்ள நீரை வெளியேற்றிய பாலாஜி நீச்சல் குளத்தின் தரையில் ஏதோ ஊர்ந்து செல்வதை கவனித்துள்ளார். அதன் அருகில் சென்று பார்த்தபோது அது முதலை என்று தெரிந்து அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து அண்ணா உயிரியல் பூங்கா அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தகவல் கிடைத்தவுடன் பாலாஜியின் வீட்டுக்கு விரைந்து வந்த உயிரியல் பூங்கா அதிகாரிகள் முதலைக்குட்டியை மீட்டு உயிரியல் பூங்காவில் கொண்டு விட்டனர். இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய பாலாஜி தங்கவேல், “எங்கள் வீட்டைச் சுற்றி எட்டு அடி நீள சுற்றுச்சுவர் உள்ளது. இந்த முதலை குட்டிகளை காகங்கள் மற்றும் பருந்துகள் கீழே இறக்கியிருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.
நெடுங்குன்றம் பகுதி அருகே பெரிய ஏரி உள்ளது. அந்த ஏரியைச் சுற்றி பல பெரிய முதலைகள் உள்ளன. ஏரி வளாகத்தில் உள்ளவர்கள் துணி துவைக்கவும், மற்ற தேவைகளுக்காகவும் செல்கின்றனர். இப்பகுதி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அருகில் உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தாலும், அவர்கள் அதிக கவனம் செலுத்தி, ஏரியில் ஏதேனும் காணப்பட்டால், மக்கள் அச்சமின்றி வாழ்வதை உறுதிசெய்ய, அவர்கள் மேலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்
மேலும், ஏரிக்கு அருகே உள்ள குழாய் வழியாக முதலை உள்ளே வருவது குறித்தும் சந்தேகம் எழுந்தது. மழைகாலத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற நீண்ட குழாய் உள்ளதாகவும், ஏரிக்கு அருகில் குழாய் திறப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார் வண்டலூர் உயிரியல் பூங்காவின் உதவி இயக்குனர் மணிகண்ட பிரபு, இந்த பிரச்சனை தனது கவனத்திற்கு வந்துள்ளதாகவும், அவர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் இந்தியன் எஸ்பிரஸிடம் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.