காஞ்சிபுரத்தில் பிரசவத்தின்போது, செவிலியரின் அலட்சியத்தால் குழந்தையின் தலை துண்டான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொம்மி என்ற பெண் நேற்று முன் தினம் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்றைய தினம் பொம்மிக்கு பிரசவ வலி அதிகமானது. இரவு நேரம் என்பதால் மருத்துவமனையில் செவிலியர்கள் மட்டுமே இருந்துள்ளனர்.
அப்போது, பொம்மி அனுமதிகப்பட்டிருந்த வார்டில் இரவு பணியில் ஈடுப்பட்டிருந்த முத்துக்குமாரி என்ற செவிலியர் அவருக்கு பிரசவம் பார்த்துள்ளார். போதிய பயிற்சி மற்றும் மருத்துவர் துணையின்றி முத்துகுமாரி பிரசவம் பார்த்ததில் குழந்தையின் தலை துண்டாகி வெளியே வந்துள்ளது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த செவிலியர் உடனடியாக பொம்மியை செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவரின் வயிற்றில் இருந்த குழந்தையின் உடல் மீட்கப்பட்டது. பொம்மி ஆபத்தான கட்டத்தில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்த அவரின் உறவினர்கள் அழுதப்படியே மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 30 கிராம மக்கள் வந்து செல்லும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரத்தில் மருத்துவர் இல்லாததால் தான் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அர்சு மருத்துவமனையில் செவிலியரின் அலட்சியத்தில் ஒரு குழந்தையின் உயிர் பறிபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதே போன்று ராஜஸ்தானில் கடந்த ஜனவரி மாதம் மருத்துவரின்றி செவிலியர் ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்தபோது குழந்தையின் காலைப்பிடித்து இழுத்ததால் தலை துண்டாகியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.