Advertisment

மீண்டும் ஸ்டாலின் 'குட் புக்'-ல் அமைச்சர் பி.டி.ஆர்: பின்னணி என்ன?

சமீபத்தில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் நன்மதிப்பை மீண்டும் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பெற்றிருப்பது வெளிப்படையாக தெரியவந்துள்ளது.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சமீபத்தில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் நன்மதிப்பை மீண்டும் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பெற்றிருப்பது வெளிப்படையாக தெரியவந்துள்ளது.

Advertisment

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  வெளியிட்ட ஆடியோவில், நிதிதுறை அமைச்சராக இருந்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் அதிக சொத்துக்களை சேர்த்துள்ளதாக பேசியிருந்தார். இந்நிலையில் இது போலியான ஆடியோ என்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்றும் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் கூட வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இந்த ஆடியோ வெளியானதால் அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார் என்று பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் இந்த பதவி மாற்றம் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. மத்திய அரசின் ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை தொடர்பான விமர்சனங்கள், மாநில அரசுகளின் உரிமையை பறித்தல், தமிழக அரசு மக்களுக்கு வழங்கும் நலத்திடங்கள் தொடர்பாக விவாத நிகழ்ச்சியில் மிகவும் தெளிவாக பேசியவர்.

இப்படி செயல்பட்டு வந்த பழனிவேல் தியாகராஜனுக்கு இந்த பதவி மாற்றம் ஒரு பின்னடைவையும், இனி அவர் முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் இருக்க வாய்ப்பில்லாத சூழலையும் உருவாக்கியது.

இந்நிலையில் அண்ணாமலை ஏற்படுத்திய இந்த சிக்கலுக்கு சமீபத்தில் ஒரு முடிவு ஏற்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசிய போது, “ இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான திருச்சி என்.ஐ.டி-யிலும், உலகின் தலை சிறந்த கல்வி நிறுவனமான எம்.ஐ.டி-யிலும் படித்தவர் பி.டி.ஆர் பழனிவேல் தியகராஜன். அவர் வெளிநாட்டில் படித்து வேலை பார்த்தாலும், அங்கேயே இருந்துவிடாமல் தமிழ்நாட்டுக்கு திரும்ப வந்து, இங்கேயே தொழில் வர்த்தகம்  என்று ஒதுங்கி விடாமல் அவரின் தாத்தா, அப்பா மாதிரியே அரசியலில் பங்கெடுத்து தன்னுடைய அறிவாற்றலை தமிழ்நாடு மக்களின் வளர்ச்சிக்காக வழங்கி வருகிறார்.

2 ஆண்டுகள் நிதி அமைச்சராக மிக சிறப்பாக செயல்பட்டு, முக்கிய மாற்றங்களை உருவாக்கியவர். நிதித்துறையை போன்று ஐ.டி துறைக்கும் பல மாற்றங்கள் தேவைப்பட்டதால், நான் அவரை ஐ.டி துறைக்கு மாற்றினேன்.

அவரின் தலைமையில் தகவல் தொழில்நுட்ப துறை மூலமாக தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பும் அதிகமாகும். நான் கொடுத்த பொறுப்பை அவர் சிறப்பாக செயல்படுத்துகிறார்” என்று தெரிவித்தார். முதல்வரின் இந்த பேச்சு, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் செயல்பாடுகளை மட்டும் பாராட்டுவதாக இல்லை. தி.மு.கவில் அவருக்கு இருக்கும் முக்கியத்துவத்தை பற்றி விளக்குவதாகவும் இருந்தது.

முதலமைச்சர் அலுவகத்திற்கு மிக நெறுக்கமான ஒருவர் இது தொடர்பாக கூறுகையில் “ பி.டி.ஆர் மிக கடினமாக உழைத்தார். திமுக அமைச்சரவையிலும், கட்சியிலும் மிகவும் சிறப்பான நபர் பி.டி.ஆர். பலரைவிட முதல்வரின் குடும்பத்திற்கு அவர் நெருக்கமானவர். அவரை நேர்காணல் கொடுக்க வேண்டாம் என்றோ, எழுத வேண்டாம் என்றோ எந்த தடை உத்தரவும் கட்சியிலிருந்து வழங்கப்படவில்லை. ஆனால் அவர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பமாக இருந்தது. அவர் ஐடி துறையில் நல்ல மாற்றங்களை செய்துள்ளார். அதுபோலவே அவர் பேசும் விதத்திலும் நல்ல முன்னேற்றம் வந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அரசியலுக்கு வருவதற்கு முன்பாக வங்கியில்தான் பணிபுரிந்தார். அவர் வெளிநாட்டில்தான் படித்து, அங்கேயே பணி செய்தும் வந்தார். அவரது தாத்தா பி.டி ராஜன் 1930-ல் மெட்ராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தார். இவரது தந்தை பி.டி.ஆர் பழனிவேல் ராஜன், திமுக அமைச்சராக இருந்தார்.

2016 மற்றும் 2021-என இரண்டு முறையும் மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் பி.டி.ஆர் போட்டியிட்டு வெற்றிபெற்றார். வாக்காளருக்கு பணம் வழங்கி வாக்கை பெற மாட்டேன் என்று அவர் வெளிப்படையாக பேசி உள்ளார்.

அமெரிக்க பெண்ணை திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மேலும் 6 நாய்குட்டிகளை அவர் வளர்த்தும் வருகிறார். இந்நிலையில் இவருக்கு கடவுளின் மீது அதிக நம்பிக்கையும் உண்டு. 2006ம் ஆண்டு அவரது தந்தை மரணத்திற்கு பிறகு அவர் செய்த சத்தியத்திற்காக, அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று தொடர்ந்து வழிபட்டு வருகிறார்.

அவரது குடும்பத்திற்கும் கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலுக்கும்  நெடு நாட்கள் தொடர்பு உள்ளது. 1950களில் சபரிமலை காடுகளில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து அவரது தாத்தா, ஐயப்பனின் சிலையை சபரிமலைக்கு வழங்கி உள்ளார். பி.டி.ஆர்-க்கு கடவுள் நம்பிக்கை இருந்தபோதும், அவர் திமுகவின் கொள்கையின்படி மதசார்பின்மை மற்றும் முற்போக்கு கருத்தியலை மட்டுமே அவர் செயல்படுத்தி வந்திருக்கிறார். 

Read in english

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment