/indian-express-tamil/media/media_files/2025/05/29/bhMUltWL9Ozzq4bghR9e.jpg)
பல் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்பட்ட கருவிகள் முறையாகத் தூய்மைப்படுத்தப்படாமல், ஒரே கருவி பல நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்பட்டதே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கடந்த 2023 ஆம் ஆண்டில் ஒரு தனியார் பல் கிளினிக்கில் சிகிச்சை பெற்ற 8 பேர் பாக்டீரியா தொற்று காரணமாக உயிரிழந்தது தொடர்பான விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பல் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்பட்ட கருவிகள் முறையாகத் தூய்மைப்படுத்தப்படாமல், ஒரே கருவி பல நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்பட்டதே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து தமிழ்நாடு பொது சுகாதார இயக்குநரகம் மற்றும் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையின் மருத்துவர்களைக் கொண்ட ஒரு குழு விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் முடிவில் வெளியான தகவல்கள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
விசாரணையில் தெரியவந்த தகவல்களின்படி, தனியார் பல் கிளினிக்கில் ஏற்பட்ட பாக்டீரியா தொற்றால் மொத்தம் 10 பேர் பாதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 8 பேர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. பல் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் கருவிகள் முறையாகச் சுத்தம் செய்யப்படாதது இந்தத் தொற்றுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.