பாராளுமன்ற தொகுதி தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் தனித்துப் போட்டியிடப்படுகிறது.
இதில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளராக உடுமலையை சேர்ந்த பெஞ்சமின் கிருபாகரன் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் கேத்தீரின் சரண்யாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தர்,முன்னதாக தேர்தல் ஆணையம் நிர்ணயத்தை தொகையை ரூ 25 ஆயிரம்ரூபாய்க்கு பத்து ரூபாய் நாணயம் கொண்டு வந்து பரபரப்பு ஏற்படுத்தினர்கிருபாகரன் கூறுகையில் பொதுமக்கள் பயன்படுத்தும் ரூபாய் பத்து ரூபாய் நாணயம் தற்போது வியாபார ஸ்தலங்களில் வாங்குவதில்லை ஆதலால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பத்து ரூபாய் நாணயம் கொண்டு வந்து வேட்பு மனு தாக்கல் செய்ததாக தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“