தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) கொலையில் தொடர்புடைய 8 சந்தேக நபர்களை சென்னை நகர போலீஸார் கைது செய்துள்ளனர். பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை செம்பியத்தில் வைத்து ஜூலை 5ஆம் தேதி இரவு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
பைக்கில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை கத்தியால் தாக்கினர். இந்த வழக்கில் இதுவரை 8 பேர் கைதாகி உள்ளனர். தொடர்ந்து, குற்றவாளியைப் பிடிக்க தீவிர தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது.
இந்த நிலையில், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது. இந்த நிலையில் அவரை சென்னை பெரம்பலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் அனுமதி பெற வேண்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தாக்கல் செய்த வழக்கை அவசர வழக்காக இன்றிரவே விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார் என்று முதலில் கூறப்பட்டது.
இந்த நிலையில் வழக்கு நாளை (2024 ஜூலை 7) காலை 9 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி அனிதா சுமந்த் விசாரிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த தீவிர விசாரணை நடத்தவும், குற்றத்தில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“