சென்னையில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி, ஒட்டகங்களை பழி கொடுத்து குர்பானி அளிக்கும் நிகழ்வுக்கு தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
கொரோனா பெருந்தொற்றை சந்தித்து வரும் சூழலில், பக்ரீத் பண்டிகையின்போது, பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, ஒட்டகங்களை வெட்டுவதற்கு தகுந்த இடங்கள் சென்னையில் இல்லை என்பதால் அவற்றை வெட்டுவதற்கு கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
மேலும், சென்னையில் தடையை மீறி ஓட்டகம் வெட்டப்படாமல் இருப்பதை காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.
தியாகத் திருநாள் அல்லது பக்ரித் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும்.
இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் அராபிய மாதம் துல் ஹஜ் 10-ம் நாள் கொண்டாடப்படுகின்றது. இந்த பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் மெக்கா நகரில் உள்ள புனித காபாவை நோக்கி ‘ஹஜ்’ எனப்படும் புனிதப்பயணம் மேற்கொள்கின்றனர். இது இவர்களின் அடிப்படை கடமைகளில் ஐந்தாவது கடமை ஆகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil