பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாளை மறுநாள் சென்னை சென்ட்ரலுக்கும் நெல்லைக்கு இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
சென்னையில் பிறை தோன்றுவதன் அடிப்படையில் நிகழும் பக்ரீத் பண்டிகை, வரும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் - நெல்லை இடையே இரு மார்க்கமாக சிறப்பு ரயில் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
28ம் தேதி இரவு 11.15 மணிக்கு சென்னையில் இருந்து நெல்லைக்கும் (06052), 29ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னைக்கும் (06051), சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இந்த சிறப்பு ரயிலுக்காக முன்பதிவு நாளை (ஜூன் 27) காலை 8 மணியில் இருந்து தொடங்குகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil