scorecardresearch

திருச்சி கே.கே. நகருக்கு புதிய காவல் ஆய்வாளர்.. சத்திய பிரியா அதிரடி

திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலகிருஷ்ணன் கே.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Bala Krishnan has been appointed as the new Inspector General of Police Trichy KK Nagar
திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா

திருச்சி மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் இரண்டு காவல் ஆய்வாளர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலகிருஷ்ணன் கே.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து, மத்திய மண்டல உளவுத்துறை பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த பாஸ்கரன் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய ஆய்வாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த உத்தரவை திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா அளித்துள்ளார்.

செய்தியாளர் க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Bala krishnan has been appointed as the new inspector general of police trichy kk nagar