மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது, வடலூர் வள்ளலார் இராமலிங்க சுவாமியை சானதன வாதியாக சித்தரிக்க ஆளுனர் ஆர்.என். ரவி முயல்வதாக பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டினார்.
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், “மத்திய அரசு உயர்த்தியிருக்கும், 25 சதவீத மின் கட்டணம் உயர்வில்,மோடி அரசு கொண்டு வந்திருக்கும் புது விதமான திட்டம் பகல் நேரத்திற்கு ஒரு வகை கட்டணம்,இரவு மின் பயன் பாட்டுக்கு பகல் நேர மின் கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் என்பதுதான்.
கடந்த மக்களவை தேர்தலில் பாஜக 38 சதவீத வாக்குகளை மட்டுமே வாங்கி ஆட்சி அமைத்தது. பாட்னாவில் கூடிய எதிர் கட்சி கூட்டம் மூலம் ஏற்படும் மாற்றங்களில் ஒன்று.
எதிர்கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதால் பிரியும் வாக்குகள் பாஜகவிற்கு இது வரை சாதமாக,வெற்றிக்கு வழி வகுத்தது.
இனி எதிர்க்கட்சிகள் ஒன்று பட்டு அமைக்கும் இந்த ஏற்பாட்டால், பாஜகவின் மக்கள் விரோத ஆட்சியை அகற்றும் முயற்சியில் வெற்றி கிட்டும்.
வடலூர் வள்ளலார் இராமலிங்க சுவாமிகளையும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விட்டு வைக்கவில்லை. அவர் மீது சனாதன போர்வையை போர்த்த நினைக்கிறார்.
சிதம்பரத்தில் தீட்சிதர்கள் நடத்திய சிறார் திருமணத்தை ஆதரிப்பது மட்டும் அல்ல; அவரே சிறுவர் திருமணத்தை செய்து கொண்டவர் என்று பேசுகிறார்.
அமைச்சர் செந்தில் என பாலாஜியை அமலாக்கத்துறை சோதனை இடுவது, கைது செய்வது பற்றி எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.
ஆனால் அமலாக்க துறை அதிகாரிகளின் அணுகுமுறை சரியா? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, பாஜக ஆட்சியில் பெண்களுக்கு கொடுமைகள் விளைவிக்கப்படுவதாகவும் கூறினார்.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“