காணும் பொங்கல் வாய்ப்பில்லை: சென்னையில் சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் கூடத் தடை

Ban for kanum pongal visits : Ban for kanum pongal visits : மெரீனா கடற்கரை, வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு பொங்கல் விடுமுறை நாட்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை

மெரீனா கடற்கரை, வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா, மாமல்லபுரம், கிண்டி தேசிய பூங்கா ஆகிய அனைத்து இடங்களுக்கு பொங்கல் விடுமுறை நாட்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்று தமிழக அரசு தெரிவித்தது.

முன்னதாக, காணும் பொங்கல் அன்று கடற்கரைகளில் அளவுக்கு அதிகமான பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்கும் வகையில், மெரீனா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் காணும் பொங்கல் அன்று மட்டும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசுக்கு கடந்த டிசம்பர் 31ம் தேதி அன்று உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், 15, 16 மற்றும் 17 என பொங்கல் விடுமுறை நாட்களுக்கும் இந்த தடையை தமிழக அரசு தற்போது நீட்டித்துள்ளது.  இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ” பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில், செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அண்ணா உயிரியியல் பூங்கா, மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள கிண்டி தேசிய பூங்காவிலும் மற்றும் மெரீனா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் அளவுக்கு ஆதிகமான கூட்டம் கூடுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மேற்கொண்ட அனைத்து இடங்களிலும் 15.01.21, 16.01.21 மற்றும் 17.01.21 ஆகிய விடுமுறை நாட்களில் மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை” என்று தெரிவிக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ban for kanum pongal visits tn govt ban tourist hotspot during pongal holidays

Next Story
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : வருகை தரும் ராகுல்காந்தி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com