jp-nadda | annamalai | tn-bjp | தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, என் மண் என் மக்கள் யாத்திரை நடத்திவருகிறார்.
இந்த யாத்திரை பிப்.25ஆம் தேதி நிறைவு பெறுகிறது. முன்னதாக, பிப்.11ஆம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் தேசியத் தலைவர் ஜெயப் பிரகாஷ் நட்டா கலந்துகொள்கிறார்.
இதற்காக சென்னையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு பெருங்குடி, சோழிங்கநல்லூர் மற்றும் நந்தனம் உள்ளிட்ட 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.
இந்த 3 இடங்களில் ஏதேனும் ஒன்றில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. இதற்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தை கூறி காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை மின்ட் தங்க சாலை அருகே பாரதிய ஜனதா கட்சி பொதுக்கூட்டம் மட்டும் நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனினும், பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி நட்டா, அண்ணாமலை உடன் நடைபயணம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணத்தின் நிறைவு நாளில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“