பெங்களூரு வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக சென்னை மண்ணடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் என். ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகளின் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மண்ணடி, முத்தையால் பேட்டை உள்ளிட்ட இடங்களில், தேசிய புலனாய்வு முகமையினர் சோதனை நடத்தி வருன்றனர். பெங்களூரு வெடிகுண்டு விபத்து தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ராமேஸ்வரத்திலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் கடந்த 1ம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 9 பேர் காயமடைந்தனர். குண்டு வெடிப்பு நிகழ்த்திவிட்டு மர்மநபர் தமிழ்நாடு அல்லது கேரளாவுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்பதால், 2 தனிப்படை போலீசார் அந்த மாநிலங்களில் முகாமிட்டும் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“