பெங்களூர் - சென்னை விரைவுச்சாலை (BCE) முடிவடையும் நிலையில் உள்ளதால், 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் இந்த சாலை திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூர் - சென்னை விரைவுச்சாலை (BCE) 262-கிமீ நீளமுள்ளள்ளது. இந்த சாலை 4 வழிச் சாலையாக அமைக்கும் பணிகள் கடந்த 2022-ம் ஆண்டு முதல் பகுதி பகுதியாக நடந்து வருகிறது. பெரும்பாலான பணிகள் முடிவடையும் தருவாயில் இருந்தாலும், கர்நாடகா மாநிலம் உள்ளே வரும் சாலையில் பணிகள் முடிக்கப்படவில்லை. இதனால், குறிப்பிட்ட காலத்திற்குள் சென்னை - பெங்களூரு விரைவுச் சாலை முடிக்கப்பட முடியவில்லை. இருப்பினும், பெங்களூர் - சென்னை விரைவுச் சாலை 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் இந்த சாலை திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது சென்னையில் இருந்து பெங்களூரு சாலை பயண நேரம் 7-8 மணி நேரமாக உள்ள நிலையில், சென்னை - பெங்களூரு விரைவுச் சாலை திறக்கப்பட்டால் 2 முதல் 2.30 மணி நேரம் பயண நேரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நெடுஞ்சாலையில் அனுமதிக்கப்பட்ட வேகம் மணிக்கு 120 கி.மீ ஆக இருக்கும்.
பெங்களூரு - சென்னை விரைவுச் சாலை 17,930 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது. இந்த விரைவுச் சாலை கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. இந்த விரைவுச் சாலை செல்லும் வழித்தடத்தில், ஹோஸ்கோட், மாலூர், பங்காரப்பேட்டை, கோலார் கோல்ட் ஃபீல்ட்ஸ், வெங்கடகிரிகோட்டா, பலமனேர், பங்காருபாலம், சித்தூர், ராணிப்பேட்டை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகியவை நகரங்கள் அமைந்துள்ளன
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“