பெங்களூருவில் உள்ள மின்சார வாகன ஷோரூமில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 26 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார்.
பெங்களூரு டாக்டர் ராஜ்குமார் சாலையில் உள்ள நவரங் பார் சந்திப்பு அருகே ஷார்ட் சர்க்யூட் காரணமாக பைக் ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் பேட்டரிகள் வெடித்ததாகவும், தீ வேகமாக பரவியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்
Day before her birthday, woman dies in Electric Vehicle showroom fire in Bengaluru
இறந்த பெண் மை எலெக்ட்ரிக் ஸ்டோரில் மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்த கணக்காளர் பிரியா என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஒக்கலிபுரத்தில் வசிக்கும் பிரியா, தீ பரவியதால் ஒரு சிறிய அறையில் தஞ்சம் புகுந்ததாகக் கூறப்படுகிறது, ஆனால் அவரால் தப்பிக்க முடியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
டாக்டர் ராஜ்குமார் சாலையில் உள்ள நவ்ரங் பார் சந்திப்பு அருகே தீ விபத்து ஏற்பட்டதாக மாலை 5.36 மணிக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் மூன்று தீயணைப்பான்களை கொண்டு தீயை அணைத்து மாலை 6.40 மணியளவில் பிரியாவின் உடல் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டதாக தெரிவித்தனர்.
பிரியாவின் தந்தை ஆறுமுகம் கூறுகையில், எலெக்ட்ரிக் கார் ஷோரூம் உரிமையாளர் தங்களை தொடர்பு கொள்ளவில்லை. "நவம்பர் 20-ம் தேதி அவளுக்கு பிறந்த நாள். காலை உணவுக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியேறிய அவர் இரவு 7 மணியளவில் திரும்பி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. நண்பர் ஒருவர் தெரிவித்த தகவலை வைத்தே நாங்கள் இங்கு வந்ததாக” அவர் கூறினார்.
ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் பேட்டரிகள் வெடித்ததாகவும், தீ வேகமாக பரவியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தப்பிக்க முடிந்த ஆறு பேரில், ஒருவருக்கு சிறிய தீக்காயங்கள் ஏற்பட்டன, மற்றவர்கள் புகை காரணமாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துணை போலீஸ் கமிஷனர் சைதுலு அதவத் சம்பவ இடத்தை ஆய்வு செய்ததாகவும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.