Tamil nadu news today updates : ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, நடப்பு கல்வியாண்டில், பொதுத்தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொதுத் தேர்வை எதிர்த்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கு தொடரப்பட்டுஉள்ளதால், தேர்வு பணிகளை பள்ளிகள் நிறுத்தியுள்ளன.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, நடப்பு கல்வியாண்டு முதல், பொதுத்தேர்வு நடத்த, 2019 செப்., 13ல், தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு, இரண்டு மாதங்களில், மறு தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவித்து உள்ளது. இந்த உத்தரவு, இலவச கட்டாய கல்வி சட்டத்திற்கு எதிரானது.பொதுத் தேர்வால், சிறு வயதுள்ள துவக்க நிலை மாணவர்களுக்கு, உடல் மற்றும் மன ரீதியாக பாதிப்பு ஏற்படும்.சிறு வயது மாணவர்களின் படிப்பில், இடைநிற்றல் அதிகரிக்கும். எனவே, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அரசாணையை, ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு - அதிரடி நடவடிக்கையை துவங்கியது சிபிசிஐடி
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 இடைத்ததரகர் ஜெயகுமாரை பற்றி துப்பு கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என சி.பி.சி.ஐ.டி. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெயக்குமார் வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 9940269998, 9443884395, 9940190030, 9498105810, 9444156386 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம் என சி.பி.சி.ஐ.டி.,யினர் அறிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: சுகாதாத்துறை சார்பில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரையில் கொரோனா வைரஸின் பாதிப்பு யாருக்கும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்: சீனாவிலிருந்து இந்தியர்களை பத்திரமாக வெளியேற உதவிய சீன அரசுக்கு நன்றி. கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு இந்தியா துணை நிற்க்கும் என தெரிவித்துள்ளார்.
குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 14 பேர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ள நிலையில், குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அளித்த புகாரின் பேரில் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது. இதில், டிஎன்பிஎஸ்சி அளித்த 42 பேரின் பட்டியலை கொண்டு சிபிசிஐடி விசாரணையை தொடங்கியது.
திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி அதிமுகவில் அமைச்சராக இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாக அவரது வீட்டில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுவரும் நிலையில், அவர் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
'நித்தியானந்தாவுக்கு நேரில் சென்று சம்மன் கொடுக்க வேண்டும்' என்று கர்நாடகா விசாரணை ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா உத்தரவு பிறப்பித்துள்ளார். நித்தியானந்தாவின் ஜாமினை ரத்து செய்யக் கோரிய லெனின் கருப்பன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அடைவு நிலைகளைக் கண்காணிப்பதன் ஒரு பகுதியாக, வகுப்பறைக் கற்றல், கற்பித்தலை மேம்படுத்தும் வகையில், அறிவியல் தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தி, பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து ஆய்வு அலுவலர்களும் வகுப்பறை நிகழ்வுகளை உற்றுநோக்கும் வகையில், 'தமிழ்நாடு வகுப்பறை நோக்கி செயலி' (Observation mobile app-TNVN) பள்ளி கல்வித்துறையால் உருவாக்கப்பட்டுள்ளது.
அதிமுகவினர் தன்னுடன் நெருக்கமாக உள்ளனர். ஆனால், நெருக்கமாக இருந்தவர்கள் தற்போது தன்னை சந்திக்கவே தயங்குகிறார்கள் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன அழகிரி கருத்து தெரிவித்திருந்த நிலையி்ல், இதுகுறித்து அதிமுகவில் அழகிரி இணைவாரா என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு மதுரையில் பதிலளித்த பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக-வில் அழகிரி இணைவாரா என்பது சந்தேகம் தான் என்றும், யார் இணைந்தாலும் அவர்களை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று கூறினார்.
தங்கள் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் பெற்றுள்ள பி.எச்.டி பட்டம் போலியானது அல்ல என்பதற்கான சான்றிதழை வரும் மார்ச் 16-ஆம் தேதிக்குள் தனியார் பொறியியல் கல்லூரிகள் சமர்ப்பிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் நிகழ்ந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், சிபிஐ இதுகுறித்து பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
விசாரணை சரியான திசையில் சென்றுகொண்டிருக்கிறது எனவே சிபிஐ விசாரணை தேவையில்லை என்று தமிழக அரசு வழக்கறிஞர் தனது தரப்பு வாதத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் விவாதங்கள், பொருளாதார பிரச்னைகளை நோக்கியதாக இருக்கும். இருஅவைகளிலும், இதுதொடர்பான ஆரோக்கியமான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு நல்லது செய்ய மீண்டும் வருவேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக சார்பில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி, சென்னை கோயம்பேட்டில் நடைபெற்றது. பிரேமலதா பேசியதாவது, கூட்டணி தர்மத்தை தேமுதிக தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. சட்டசபை தேர்தலுக்கு தேமுதிக தயாராகி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜியின் சென்னையில் உள்ள வீட்டிற்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். 2011-2016ம் ஆண்டில் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது பணிநியமனம் வாங்கித்தருவதாக மோசடி செய்தது தொடர்பாக, சென்னை, கரூர் பகுதிகளில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, அலுவலகம், ஜவுளி ஏற்றுமதி அலுவலகம், சகோதரர் வீடு உள்ளிட்டவைகளில் போலீசார் சோதனை நடத்தினர். செந்தில் பாலாஜி இல்லாதநேரத்தில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் துவங்கியது. கூட்டத்தொடரின் முதல்நாள் என்பதால் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அவர் பேசியதாவது, பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு பதவியேற்றுக்கொண்ட 7 மாதங்களில் முத்தலாக், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை இயற்றி சாதனை படைத்துள்ளது. 356,370 சட்டப்பிரிவுகளின் மூலம் காஷ்மீர், லடாக் பகுதிகளிலும் சமஉரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது. அயோத்தி தீர்ப்பின் போது மக்கள் காட்டிய முதிர்ச்சி பாராட்டத்தக்கது. போராட்டங்கள் என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளால், நாட்டிற்கு பெரிய பாதிப்பு ஏற்படுவதாக அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை ( பிப்ரவரி 1ம் தேதி) தாக்கல் செய்ய உள்ளார்.
நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா சார்பில் புதிய மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது தான் சிறார் என்பதை உச்சநீதிமன்றம் பரிசீலிக்கவில்லை என தற்போது புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.
திருவண்ணமலையை சேர்ந்த சாப்ட்வேர் இஞ்ஜினியர் விமல், சமீபத்தில் சீனாவிலிருந்து திரும்பியுள்ளார். அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததாக சந்தேகிக்கப்படும் நிலையில், அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
தஞ்சை பிரகதீஸ்வரம் கோயில் கும்பாபிஷேகம் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் மொழிகளில் நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.
இருமொழிகளிலும் குடமுழுக்கு நடத்துவதாக இந்து அறநிலையத்துறை உறுதி அளித்ததை தொடர்ந்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் காங்கிரஸ் பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரில் சென்ற போது கிருமாம்பாக்கம் அரசுப்பள்ளி அருகே சம்பவம் நடைபெற்றுள்ளது. பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் சாம்பசிவம் மீது வெடிகுண்டு வீசிய மர்மநபர்கள் தப்பியோடிய போது அரிவாளால் வெட்டினர்.
சென்னையை அடுத்த ஆவடியில் ராணுவ ஆயுதத் தொழிற்சாலையில் பாதுகாப்பு ஊழியர் சக ஊழியரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த வளாகத்தில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் பணிபுரியும் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த நிலாம்பர் சின்கா என்பவர், கடந்த இரண்டு நாட்களாக மன உளைச்சலால் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று நள்ளிரவு 12.15 மணி அளவில் பாதுகாப்பு வீரர்கள் தூங்கிக் கொண்டிருந்த அறையை நோக்கி இன்சா ரக துப்பாக்கியால் சுடத் தொடங்கியுள்ளார் நிலாம்பர். இதில் அறையில் தூங்கிக் கொண்டிருந்த இமாச்சல பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த கிரிஜேஷ் குமார் என்ற சக வீரர் மீது குண்டு பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
2011-16 அதிமுக அரசில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித்தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் கீழ், எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியின் வீட்டில் போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
கடந்தஆண்டில் திமுகவில் இணைந்த அவர் தற்போது அக்கட்சியின் எம்.எல்.ஏ ஆக உள்ளார்.
மத்திய அரசின் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், தொழிலாளர் சேம நல நிதியத்தில், 80 ஆயிரம் நிறுவனங்களைச் சேர்ந்த, 9 லட்சம் தொழிலாளர்கள் மூலம், 300 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights