Advertisment

Bar Nagaraj Video: 'அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை' - பார் நாகராஜ் விளக்கம்

Pollachi Bar Nagaraj Video: எனது அங்க அடையாளங்களை நன்கு பாருங்கள். அது நானில்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bar Nagaraj Video: 'அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை' - பார் நாகராஜ் விளக்கம்

Bar Nagaraj Video: 'அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை' - பார் நாகராஜ் விளக்கம்

Bar Nagaraj Video: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் வெளியான வீடியோவில் இருப்பது நான் அல்ல என்று பார் நாகராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஃபேஸ்புக் மூலம் காதலர்களாகவும் நண்பர்களாகவும் பழகி பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் அதனை வீடியோவாக எடுத்து மிரட்டும் கும்பல் சிக்கியுள்ளது. வீடியோ காட்டி பணம் பறிப்பதும், பாலியல் தேவைகளுக்கு அவர்களை பயன்படுத்துவதும் என இவர்கள் செய்த அட்டகாசம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க - Pollachi Sexual Assault Live Updates : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு

இளம் பெண் ஒருவரின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பின்னர் அடுக்கடுக்காக கொடூரர்களின் கோர முகம் அம்பலமாகி வருகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சபரிராஜன், (வயது 25) திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே, புகார் கொடுத்த கல்லூரி மாணவியின் அண்ணனை மிரட்டிய வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் பார் நாகராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் உடனே ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் நாகராஜை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி அந்த கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் படிக்க - பொள்ளாச்சி கூட்டு பலாத்கார வழக்கு சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு

இந்நிலையில், நாகராஜூக்கு சொந்தமான மது பாரை நேற்று 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சூறையாடினார்கள். அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார்கள்.

பொள்ளாச்சி பார் நாகராஜ் வீடியோ

இந்தச் சூழ்நிலையில், பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக மேலும் மூன்று வீடியோக்கள் வெளியானது. இதில், ஒரு வீடியோவில் பார் நாகராஜ் பெண்களுடன் நிர்வாணமாக உல்லாசம் அனுபவிப்பது போன்று காட்சிகள் இடம்பெற்றிருந்தது.

இதைத் தொடர்ந்து தன்னிலை விளக்கம் அளித்துள்ள பார் நாகராஜ், அந்த வீடியோ காட்சிகளில் இருப்பது சதீஷ் என்பவர் தான். அது நானில்லை. எனது அங்க அடையாளங்களை நன்கு பாருங்கள். அது நானில்லை. கைது செய்யப்பட்டிருக்கும் நான்கு பேரில் உள்ள சதீஷ் தான் அந்த வீடியோவில் இருப்பது என்று தெரிவித்துள்ளார். மேலும், தன் மீது அடிதடி வழக்குகள் மட்டுமே இருப்பதாகவும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கோ, குற்றச்சாட்டுகளோ தன் மீது கிடையாது எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் தன் மீதான அடிதடி வழக்குகளில் காவல் துறையினர் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் அதில் ஆஜராக தயாராக இருப்பதாகவும் பார் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

Pollachi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment