பாசி நிதி நிறுவன ரூ.930 கோடி மோசடி: 2 பேருக்கு தலா 27 ஆண்டுகள் சிறை.. ரூ.171 கோடி அபராதம்!

வழக்கு தொடர்ந்த 1402 பேருக்கு இந்தப் பணத்தை தர நீதிபதி உத்தரவிட்டார்.

வழக்கு தொடர்ந்த 1402 பேருக்கு இந்தப் பணத்தை தர நீதிபதி உத்தரவிட்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Basi RS 960 crore fraud case: 2 Get 27 years Jail

பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற மோகன் ராஜ், கமலவள்ளி.

திருப்பூரை தலைமையிடமாக கொண்டு கடந்த 201இல் பாசி டிரேடிங் என்ற ஆன்லைன் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறியதை நம்பி, ஏராளமான முதலீட்டாளர்கள் பணம் முதலீடு செய்தனர்.

Advertisment

ஆனால் முறையாக வட்டி தராமல் பொதுமக்களிடம் இருந்து 930 கோடிரூபாய் மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் இயக்குநர் மோகன்ராஜ், அவரது தந்தை கதிரவன் மற்றும் பங்குதாரர் கமலவள்ளி ஆகியோரை சி.பி.ஐ போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாட்டில் அதிகப்படியான நபர்களிடம் மோசடி செய்யப்பட்ட இந்த வழக்கு, அப்போது தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த மோசடி தொடர்பாக கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) வழக்கு நடந்து வந்தது.

கடந்த 2013ம் ஆண்டில் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 9 ஆண்டுகள் சாட்சி விசாரணை நடந்து வந்த நிலையில், அரசு மற்றும் எதிர் தரப்பு சாட்சியம், இருதரப்பு வாதம் முடிவடைந்தது.

Advertisment
Advertisements

இதனிடையே முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்க உள்ளதால், தங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று அந்நிறுவன உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.

இந்நிலையில் பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் நீதிபதி ரவி இன்று (ஆகஸ்ட்26) தீர்ப்பு வழங்கினார். கதிரவன் உயிரிழந்து விட்ட நிலையில் மோகன்ராஜ் மற்றும் கமலவள்ளி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

அந்நிறுவனத்தின் உரிமையாளர் மோகன்ராஜ் மற்றும் பங்குதாரர் கமலவள்ளி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். அப்போது முதலீட்டாளர்களுக்கு ஒராண்டிற்குள் பணத்தை வட்டியுடன் திரும்ப தருவதாக மோகன்ராஜ் நீதிபதியிடம் தெரிவித்தார்.

அதனை ஏற்க மறுத்த நீதிபதி ரவி இருவருக்கும் தலா 27 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் ரூ.171 கோடியே 74 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், வழக்கு தொடர்ந்த 1402 பேருக்கு இந்தப் பணத்தை தர நீதிபதி உத்தரவிட்டார்.

பாசி நிதி நிறுவன வழக்கை முறையாக விசாரிக்காத சிபிஐ போலீசாருக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்ட 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கும் பணத்தை திரும்ப பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

செய்தியாளர் பி. ரஹ்மான்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: